குமரியில் பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்.. உதவி செய்வது போல் ஏமாற்றி பாலியல் பலாத்காரம்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே, பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவி, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்குச் செல்வதற்காக தனது தந்தை அழைத்துச் செல்வதற்காக காத்திருந்தபோது, ஒரு நபர் அந்த மாணவியை அழைத்துச் சென்று ஒரு வீட்டில் விட்ட நிலையில், அங்கு வேறொருவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தென்கோடி முனையான குமரி மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது கூட்டு பாலியல் பலாத்காரம் எனவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரியில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
கன்னியாகுமரி மாவட்டம், கொற்றிக்கோடு பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி கைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில், அந்த மாணவி உள்பட 14 மாணவிகளை கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், கைப்பந்து போட்டியில் கலந்துகொள்வதற்காக திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
போட்டிகள் முடிவடைந்த பிறகு, டிசம்பர் 27ஆம் தேதி இரவு 9 மணி அளவில் மாணவிகள் கன்னியாகுமரியில் உள்ள தங்கள் பள்ளிக்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது, மற்ற மாணவிகளை அழைத்துச் செல்ல பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர். ஆனால், இந்த மாணவி தன்னை அழைக்க தந்தை இப்போது வந்து விடுவார் எனக் கூறி வெளியே வந்துள்ளார்.
உதவி செய்வது போல நடித்து
அங்கு அந்த மாணவி நீண்ட நேரம் காத்திருந்துள்ளார். அப்போது சாலை ஓரத்தில் நின்றதை பார்த்து அங்கு நின்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், ஏன் இங்கு நிற்கிறாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி, தனது தந்தை வருவதற்காக காத்திருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த நபர், தான் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிடுவதாக கூறி, அந்த மாணவியை பைக்கில் ஏற்றியுள்ளார். ஆனால், வேறொரு வீட்டுக்கு கொண்டு சென்று, வலுக்கட்டாயமாக ந்த மாணவிக்கு கூல் ட்ரிங்ஸ் கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அங்கு வேறொரு நபர் இருந்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
அப்போது அந்த நபர், அந்த மாணவியை வெளியே செல்ல விடாமல் தடுத்து, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஒரு அறைக்குள் வைத்து பூட்டி, அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க அந்த மாணவி போராடியுள்ளார். ஆனாலும் விடாமல் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த மாணவி கடுமையாக அலறியதால் அவரை வெளியே அனுப்பி உள்ளார் அந்த நபர்.
மறுபுறம், காத்திருப்பதாகச் சொன்ன அந்த மாணவியைக் காணாமல் அவரது தந்தை தேடி உள்ளார். பின்னர், அந்த மாணவி வெகு தாமதமாக வீட்டுக்குச் சென்ற நிலையில், விசாரித்த பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடூரத்தைப் பற்றிக் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மணலிக்கரையைச் சேர்ந்த பைசல் கான் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டு பாலியல் பலாத்காரம்?
ஆனால், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதலில் மாணவியை அழைத்துச் சென்ற ரித்திஷ் குமாரையும், வீட்டுக்குள் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த பைசல் கானையும் அடைத்து வைத்ததாகவும் பின்னர், ரித்திஷ் குமாரை போலீசார் விடுவித்துவிட்டு, பைசல் கானை மட்டும் ரிமாண்ட் செய்ததாகவும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இந்த வழக்கில் முதல் குற்றவாளியை தப்பிக்க விட்டதில் மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் பலருக்கு தொடர்பு இருக்கலாம், உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளியை தப்பிக்க விட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications