தருமபுரி மக்களின் 84 ஆண்டு கனவு திட்டம்.. மொரப்பூர் ரயில் குறித்து சௌமியா அன்புமணி அப்டேட்
தர்மபுரி: தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம் தருமபுரி மாவட்ட மக்களின் 84 ஆண்டு கனவு திட்டம். 2019 ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான திட்டம். ஐந்து ஆண்டுகளாக இந்த திட்டம் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்த திட்டத்திற்கான நில அளவை உள்ளிட்ட எந்த ஒரு பணியும் நடைபெறாமல் இருந்தன. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்தின் 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த ரயில் திட்டம் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என சௌமியா அன்புமணி எம்எல்ஏ கூறினார்.
தருமபுரி மொரப்பூர் ரயில்வே திட்ட பணிகள் குறித்து தருமபுரி ரயில்வே நிலையத்தில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ரயில்வே துறை அதிகாரியிடம் தற்போதைய பணிகள் குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி பேசுகையில், சென்னையிலிருந்து எல்லா பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்து உள்ளது. தருமபுரியில் இருந்து சென்னைக்கு மட்டும் இல்லை. மொரப்பூர் ரயில் நிலையத்திலிருந்து தருமபுரி ரயில் நிலையத்திற்கு 34 கிமீ தண்டவாளம் இல்லை. இரண்டாம் உலகப்போரில் போருக்கு தேவையான தளவாடங்களை கொண்டு வர மொரப்பூரில் இருந்து தருமபுரி வரை ரயில் பாதை பயன்படுத்தப்பட்டது.

இப்போது அந்த தண்டவாளங்கள் இல்லை. இதனை கொண்டு வர 19 முறை ரயில்வே துறை அமைச்சரை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். ஆனால் இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினால் தான் திட்டம் செயல்படும். மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரே ரயில் திட்டம் இதுதான். ஆனால் மாநில அரசு நிதி கொடுக்காததால், மத்திய அரசிடம் முழு நிதியையும் பெற முயற்சித்துள்ளார். இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வேண்டும். மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். அதை மாநில அரசு செய்யவில்லை. ரயில் பாதையில் ஆக்கிரமிப்பு, வீடு கட்டியவர்களுக்கு நிவாரணமாக கொடுக்க முடியாத சூழல் உள்ளது. இதனை கருணை உள்ளத்தோடு செய்து கொடுக்க வேண்டும்.
தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம் தருமபுரி மாவட்ட மக்களின் 84 ஆண்டு கனவு திட்டம். 2019 ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான திட்டம். ஐந்து ஆண்டுகளாக இந்த திட்டம் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்த திட்டத்திற்கான நில அளவை உள்ளிட்ட எந்த ஒரு பணியும் நடைபெறாமல் இருந்தன. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்தின் 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.
மீதமுள்ள நில அளவைப் பணி செய்து அங்குள்ள விவசாயிகளுக்கு நிலத்திற்கான நிதியை வழங்கி அதனை ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்தப் பணி நிறைவு பெற்றால் 4 மாதங்களில் டெண்டர் பணிகளை முடிவு செய்து இரண்டு ஆண்டுகளில் தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்தை முழுமையாக முடிக்க முடியும் என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்" என்றார்.
மேலும், இந்த பகுதிக்கு புதிதாக 2 ரயில் நிலையங்கள் கிடைக்கும் என்று கூறிய சௌமியா அன்புமணி அதுபற்றி பேசும் போது, "தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம் அமைந்தால் இந்த பகுதியில் இரண்டு புதிய கூடுதல் ரயில் நிலையங்கள் கிடைத்துவிடும். தருமபுரியில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்யலாம். தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டை அமையும்போது பொதுமக்களுக்கும் தொழில்துறையினருக்கும் பயனுள்ள வகையில் இந்த திட்டம் அமையும்.
தருமபுரி மாவட்டத்திலிருந்து சேலம், பெங்களூரு, நாகர்கோயில் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளுக்கு ரயிலில் செல்லலாம். ஆனால் மாநில தலைநகரான சென்னைக்கு செல்ல முடியாத நிலை தற்போதும் உள்ளது. தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம் நிறைவடைந்தால் அந்த குறையும் நீங்கும். இங்கிருந்து சென்னைக்கு ரயிலில் செல்ல முடியும். மேலும், தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்திற்கான நில எடுப்பு பணிகளை துரிதப்படுத்தி ரயில்வே துறையிடம் ஒப்படைக்க அதிகாரியிடம் கேட்டுக் கொண்டதாகவும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சௌமியா அன்புமணி, தமிழகத்தில் பாலியல் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனே இரண்டு மாதத்தில் மரணதண்டனை கொடுக்க வேண்டும். உயிர் பயத்தை ஏற்படுத்தினால்தான் குற்றங்கள் குறையும் என்றார்.
-
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு.. ஐயப்பனை தரிசித்த அன்புமணி ராமதாஸ்! கூடவே சென்ற பேரக் குழந்தைகள்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி














Click it and Unblock the Notifications