கரூர் சம்பவம் நடந்ததும்.. முதல் கால் யாரிடம் இருந்து தெரியுமா? ஸ்டாலின் பயந்துட்டார்! ஆதவ் அர்ஜுனா
குமரி: தவெக மக்கள் சந்திப்பு கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. கரூர் சம்பவத்தையடுத்து, விஜய்க்கு முதல் ஆளாக போன் செய்து ஆதரவு கொடுத்த தலைவர் யார்? என்பது பற்றியும் இதனால், முதல்வர் ஸ்டாலின் பயந்துவிட்டார் என்றும் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
கன்னியாகுமரி அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல் போன் எங்கிருந்து தெரியுமா?
கரூரில் கொலைப்பழியை போட்டு பார்த்தார்கள்.. எப்படி இயேசுநாதர் சிலுவையில் அறைந்து அவர் மீது கொலைப்பழியை சுமத்த சூழ்ச்சியாளர்கள் நினைத்தார்களோ.. அதேபோல, ஒரு தூய உள்ளத்தை கொண்ட எங்க தலைவர் (விஜய்) மீது கொலைப்பழியை சுமத்த பார்த்தார்கள்..
ஆனால் முதல் போன் எங்கிருந்து தெரியுமா? ராகுல் காந்தியிடம் இருந்து.. அதுதான் ஸ்டாலின் பயந்துவிட்டார். ஏனென்றால் ராகுல் காந்திக்கு தெரியும். அங்க என்ன நடந்துட்டு இருக்குன்னு.. பிரதமர் ஐயம் ஆல்வேஸ் வித் யூ.. டோண்ட் வொர்ரி.. என ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார். அப்போ.. டெல்லி முதற்கொண்டு எல்லா தலைவர்களும் பேசுனாங்க..
செங்கோட்டையன் நினைத்திருந்தால்
எதுக்காக.. எங்கள் தலைவர்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்று.. பாஜக முதல் கொண்டு உணர்ந்துவிட்டது. அந்த வலிமை விஜய்யிடம் உள்ளது. எம்.ஜி.ஆர் பார்த்து நீங்கள் சொல்லிட்டு இருந்தீங்க.. அவருக்கு பண பலம் இருக்கா.. வாக்கு வலிமை இருக்கா.. சீனியர்ஸ் இருக்காங்களா என்று.. இதோ அண்ணன் செங்கோட்டையன் வந்தார்.. 55 வருஷ அனுபவம் கொண்டவர். அவருக்கு தெரியாதா..
அவர் நினைச்சு இருந்தால் பாஜகவிடம் போய் ஒரு கவர்னர் ஆகியிருக்கலாம். மத்திய அமைச்சர் ஆகியிருக்கலாம்.. இல்லை திமுகவிடம் நாளைக்கே அமைச்சர் ஆகியிருக்கலாம். ஏன் இங்கே வந்தார்? செங்கோட்டையனுக்கு தெரிந்தது தமிழ்நாட்டின் எதிர்காலம் விஜய் என்று.. அவ்ளோதான்..
அதிமுக கூடாரம் இருக்குமான்னே தெரியாது
எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பார்த்த செங்கோட்டையன் விஜய்யை பார்த்து வந்தார் என்றால் விஜய்தான் அடுத்த எதிர்காலம். அதை செங்கோட்டையன் உணர்ந்தார். இன்னும் பல பேர் வர ரெடியாகிட்டு இருக்காங்க.. இன்னும் கொஞ்ச நாளில் அதிமுக கூடாரம் இருக்குமான்னே தெரியாது. மக்களும் தலைவரும் இணையும் இடத்தில்தான் ஒரு புதிய ஆட்சி உருவாக முடியும்.
நான் வரும் போது இந்த ஊரே திரண்டு நிற்கிறது. இதற்கு ஒரு ரூபாய் நான் கொடுக்கல.. இதுதான் அன்பு.. இந்த அன்பை கோடி ரூபாய் இருந்தாலும் எடுத்துக்கொள்ள முடியாது. உங்க பையனை முதல்வர் ஆக்குவதற்கு நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம். அதற்காக என்ன வேணா செய்யலாம். ஆனால் அன்பு உருவாக்கப்படுவது இல்லை.
ஒரு எம்பி கூட சிறுபான்மையினருக்கு கொடுக்கல
மக்களால் தீர்மானிக்கப்படுவது.. பணத்தால் உருவாக்கப்படுவது இல்லை.. மக்களால் தீர்மானிக்கப்படுது. இப்படி அன்பும் நம்பிக்கையும் விஜய் மீது உள்ளது. திமுக, அதிமுக தொண்டர்கள் தவெக பக்கம் வந்துவிட்டார்கள். நமக்கு வந்த அளவு உறுதியாக மக்கள் செல்வாக்கு உள்ளது. கடந்த 2024 தேர்தலில் நாமெல்லாம் சேர்ந்துதான் திமுகவை ஜெயிக்க வைத்தோம்.
40/40 தொகுதி.. திமுகவின் 22 எம்பிக்களில் ஏன் ஒரு கிறிஸ்தவ பிரதிநிதி, முஸ்லீம் பிரதிநிதி இல்லை.. இதுதான் நாடகம். திமுக மதசார்பற்ற கட்சி என்று சொல்வார்கள். ஆனால் ஒரு எம்பி கூட சிறுபான்மையினருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ராஜ்யசபா கொடுப்பாங்க.. ஏன் மக்கள் பிரதிநிதியாக ஒருவரை நிற்க வைத்து ஜெயிக்க வைக்க மாட்டேங்குறாங்க..
மகனை எப்படி முதல்வர் ஆக்குவது
சமூக நீதி இல்லாத கட்சியாக திமுக உள்ளது. தன்னுடைய மகனை எப்படி முதல்வர் ஆக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். தவெக எக்காரணம் கொண்டும் மதபெரும்பான்மை வாதிகளுடன் சேராது என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் எப்போ பார்த்தாலும் அவர்களை ஏன் எதிர்க்கவில்லை என்று எங்க பக்கம் பால் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
ரோடு ஷோ சென்ற ஆதவ் அர்ஜுனா
பாஜகவிற்கு வாக்கு வங்கியே இல்லாத போது நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும். இது முதல்வரை உருவாக்க கூடிய சட்டமன்ற தேர்தல். எங்களின் ஒரே எதிரி திமுக. எம்.ஜி.ஆர் எப்படி தீர்மானித்தாரோ அதேபோல நாங்களும் தீர்மானித்துவிட்டோம். மற்றவையெல்லாம் 2029-இல் பார்த்துக்குவோம். செமி பைனலில் நாங்கள் அதிமுகவை ஜெயிச்சிட்டோம்.. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக குமரி வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலை வளம் வந்த ஆதவ் அர்ஜுனாவின் காரை நாலாபுறமும் சூழ்ந்து தவெக துண்டுகளை கொடுத்தனர். அவரும் கையசைத்தப்படி உற்சாகத்துடன் வந்தார்.
-
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
இப்பவாது யோசிங்க எடப்பாடி.. அதிமுக தொண்டர்களின் பல்ஸை பிடித்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications