Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000.. உதயநிதி சொன்ன சூப்பர் மேட்டர்! அந்த அம்சத்தை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இடம்பெற்ற ஒரு அம்சம் இதற்கு முன் எந்த அரசு திட்டங்களிலும் இல்லை என தெரிவித்து உள்ளார் உதயநிதி ஸ்டாலின். அப்படி என்ன அம்சம்? விரிவாக பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை மற்றும் மகளிர் திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்,

Udhayanidhi Stalin mentioned a feature included in the Rs.1000 Magalir urimai thogai scheme

அப்போது பேசிய அவர், "பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களும் ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்காக வழிவகை செய்யும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை வழங்க ஆணை பிறப்பித்ததன் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.1000/- அவர்களுடைய வங்கி கணக்கில் சேர்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கிற வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1000 டெபிட் கார்டுகள் மற்றும் 255 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் சகோதரிகளுக்கு ரூ.26.97 கோடி அளவில் கடனுதவி வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் மகத்தான திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார்கள்.

1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும், கிட்டத்தட்ட 2 லட்சத்து 82 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டது, இதுவே முதல்முறை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி தான் உங்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான தேதி என்றாலும், ஒரு நாள் முன்னதாக 14 ஆம் தேதியே தமிழ்நாடு அரசால் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இன்றைக்கு 1000 டெபிட் கார்டுகளை வழங்குகிறோம் என்றால், இவை பணம் எடுப்பதற்கான கார்டுகள் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகிற துருப்புச்சீட்டு. இந்தத் திட்டத்தை பின்பற்றி, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எந்த ஒரு அரசு திட்டத்தை செயல்படுத்தப்படுகிற போதும், மேல்முறையீடு செய்கிற வசதி இருக்காது. ஆனால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை பொறுத்தவரை, விண்ணப்பம் ஏற்கபடாதவர்கள், மீண்டும் மேல்முறையீடு செய்கிற வசதியைச் செய்துள்ளோம்.

இதுவரை 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். மேலும், உங்கள் மேல்முறையீட்டை பரிசீலிக்க துணை ஆட்சியர். சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளோம். மகளிர் மட்டுமன்றி திருநங்கையர், மாற்றுத்திறனாளிகளும் இன்றைக்கு இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர். நான் சட்டமன்றத்தில் பேசியது போல், தகுதியுள்ள ஒரு மகளிர் கூட இந்த திட்டத்தில் இருந்து விடுபட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறோம்." என்று தெரிவித்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+