கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொன்னாரும் தமிழிசையும் எந்த முகத்தை வைத்து கொண்டு வெளியே வருகிறார்கள்?.. வசந்தகுமார் எம்எல்ஏ

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் எம்.எல்.ஏ வசந்தகுமார் பேட்டி-வீடியோ

    கன்னியாகுமரி: பாமக, அதிமுக தேர்தல் கூட்டணி, பணத்தால் இணைந்த கூட்டணி என்றும் கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்று கூறி வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் இன்று அதிமுகவுடன் கூட்டணி வைத்து விட்டு எந்த முகத்துடன் வெளியே வருகிறார்கள் என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.

    கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறுகையில், பாமக- அதிமுக தேர்தல் கூட்டணி என்பது நினைத்து கூட பார்க்க முடியாதது. இது திடீர் கூட்டணி அல்ல.

    இவ்வுளவு சீட் இவ்வுளவு பணம் தருவேன் என கூறி திட்டமிட்ட கூட்டணி என்றும், கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லை, பணத்தால் இணைந்த கூட்டணி. அதிமுக அரசை பற்றி மிகவும் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்த பா.ம.க.வினர் ஆளுநரிடம் சென்று புகார் மனு அளித்தனர்.

    அதிரடி ரெய்டு

    அதிரடி ரெய்டு

    இந்த நிலையில் இன்று பணத்திற்காக கூட்டணி சேர்ந்து உள்ளனர், அதனை போன்று பா.ஜ.க. அரசு உலக வரலாற்றிலேயே தமிழகத்தில் முதன்மை செயலாளர் அலுவலகத்தில் சென்று அதிரடி ரெய்டு நடத்தியதில் இருந்து அதிமுக அரசின் நிலை தெரிந்தும் கூட்டணி வைத்து உள்ளார்கள்.

    பொன்னார்

    பொன்னார்

    கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்று கூறி வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் இன்று அதிமுகவுடன் கூட்டணி வைத்து விட்டு எந்த முகத்துடன் வெளியே வருகிறார்கள்.

    தேர்தல்

    தேர்தல்

    அரசியலில் ஒரு பண்பாடு இல்லாமல் அவர்கள் செயல்படுவது மக்கள் தீர்மானிப்பார்கள். தவறு இழைப்பவர்களுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் வந்தால் அதனை எங்களுக்கு தந்து விட வேண்டும்.

    குற்றம்சாட்டினார்

    குற்றம்சாட்டினார்

    வேறு எதை வேணுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பா.ஜ.க.விடம் அதிமுகவினர் பேசி முடித்து உள்ளார்கள் காரணம் தங்கள் பதவிகளை தக்க வைத்து கொள்வதற்காகதான் என வசந்தகுமார் அவர் குற்றம் சாட்டினார்.

    English summary
    Vasanthakumar MLA condemns ADMK -BJP alliance and calls it as they are joined because of money only.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X