Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதே சிரிப்பு.. “கெஸ்ட்” வேலம்மாள் பாட்டி! ஜாக்சன் ஹெர்பி ஸ்டூடியோ திறப்பு விழாவில் “உணர்ச்சிகரம்”

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: முதலமைச்சரின் ரூ.2,000 நிதியுதவி பெற்ற வேலம்மாள் பாட்டியை போட்டோ எடுத்து பிரபலமடைந்த புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பியின் போட்டோ ஸ்டூடியோவை வேலம்மாள் பாட்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

வேலம்மாள் பாட்டி என்றவுடன் தமிழ்நாடு மக்களின் நினைவுக்கு வருவது பற்கள் இல்லாத பொக்கை வாயுடன் சிரித்துக்கொண்டு கையில் ரூ.2000 ரூபாய் பணத்தை வைத்திருப்பது.

யாராலும் எளிதில் யாராலும் மறக்க முடியாத இந்த புகைப்படத்தை எடுத்தவர் ஜாக்சன் ஹெர்பி. கொரோனா 2 வது அலையால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மக்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 வது தவணையாக ரூ.2,000 பணம் மற்றும் மளிகை பொருள் தொகுப்பு வழங்கப்பட்டது.

வேலம்மாள் பாட்டி

வேலம்மாள் பாட்டி

அப்போது ரேசன் கடையில் ரூ.2,000 பணத்தையும் மளிகை பொருள் தொகுப்பையும் பெற்ற வேலம்மாள் பாட்டி சிரித்த புகைப்படத்தை கச்சிதமாக படம் பிடித்தார் அப்போது நாகர்கோவில் மாநகராட்சியின் புகைப்படக் கலைஞராக இருந்த ஜாக்சன் ஹெர்பி. இந்த திட்டம் தொடர்பான செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் அனைத்தும் ஜாக்சன் ஹெர்பி எடுத்த வேலம்மாள் பாட்டியின் படத்தையே பயன்படுத்தின.

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தனது ட்விட்டர் பக்கத்தில் வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அரசின் கொரோனா நிவாரண உதவி திட்டத்தை ஒற்றை படத்தில் மக்கள் முன் கொண்டு சென்ற ஜாக்சன் ஹெர்பியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்தே பாராட்டினார். இந்த அங்கீகாரத்தின் மூலம் புகைப்படத்துறையில் முன்னேறிவிடலாம் என்று நினைத்தார் ஜாக்சன் ஹெர்பி

வேலை இழப்பு

வேலை இழப்பு

ஆனால், ஜாக்சன் ஹெர்பிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. மாநகராட்சி புகைப்படக் கலைஞர் பணியை அவர் இழக்க, பொருளாதார தேவைக்காக தனி நபர் கேமராமேனாக பணியாற்றினார். இந்த கஷ்டமான சூழலிலும் தனது திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்த வேலம்மாள் பாட்டியை அடிக்கடி சென்று பார்த்து நலம் விசாரித்து வந்துள்ளார்

வீடு வழங்க கோரிக்கை

வீடு வழங்க கோரிக்கை

இந்த நிலையில் ஆகஸ்டு மாதம் ஜாக்சன் ஹெர்பி வேலம்மாள் பாட்டி பேசும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில், பாட்டி "முதலமைச்சர் ஐயா! உங்களிடம் வீடு தாருங்கள் என்று சொன்னேன். கலெக்டரையும் பார்க்க சென்றேன். அவரும் தருவதாக சொன்னார். இதுவரை தரவில்லை. தெருவில் நிக்கிறேன் ஐயா!" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

வீடு வழங்க உத்தரவு

வீடு வழங்க உத்தரவு

கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்தித்தபோது சொன்னதை குறிப்பிட்டு வேலம்மாள் பாட்டி இவ்வாறு சொன்னார். இந்த வீடியோவை தொடர்ந்து முதலமைச்சரே மாவட்ட ஆட்சியரிடம் தொடர்புகொண்டு பேசி பாட்டிக்கு வீடு வழங்க உத்தரவிட்டார். அதன்பேரில் இன்று கோட்டாட்சியர் பாட்டிக்கு குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்கப்பட்டதற்கான ஆணையை வழங்கி உள்ளார்.

ஜாக்சன் ஹெர்பி ஸ்டூடியோ

ஜாக்சன் ஹெர்பி ஸ்டூடியோ

இந்த நிலையில் புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பில் சொந்தமாக போட்டோ ஸ்டூடியோவை நாகர்கோவிலில் திறந்து இருக்கிறார். ஜாக்சன் ஹெர்பில் போட்டோ வேர்ல்டு என்ற பெயரில் நாகர்கோயிலில் தொடங்கப்பட்டு உள்ள இந்த ஸ்டூடியோவை வேலம்மாள் பாட்டியை அழைத்து வந்து ரிப்பன் வெட்ட சொல்லி திறந்து வைத்து இருக்கிறார் ஜான்சன் ஹெர்பி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+