கன்னியாகுமரி அருகே வீட்டின் பின்னால் சப் இன்ஸ்பெக்டர் இருந்த கோலம்.. பார்த்து ஆடிப்போன மனைவி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முளகுமூடு மலைமுருங்கத்தட்டுவிளை பகுதியை சேர்ந்த ஸ்டீபன் அருள்ராஜ் நாகர்கோவில் போக்குவரத்து போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு வயோலா என்ற மனைவியும், 2 மகளும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற எஸ்ஐ மீண்டும் திரும்ப வரவே இல்லை.. அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முளகுமூடு மலை முருங்கத்தட்டுவிளை பகுதியை சேர்ந்த 56 வயதாகும் ஸ்டீபன் அருள்ராஜ், நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி வயோலா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

ஸ்டீபன் அருள்ராஜூக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இடது காலில் புண் ஏற்பட்டது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் அவருக்கு குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பணிக்கு செல்ல முடியாமல் கடந்த 2 மாதமாக மருத்துவ விடுப்பில் வீட்டிலேயே இருந்து வந்தாராம். உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்றும் சரியாகாததால் கடந்த சில நாட்களாக ஸ்டீபன் அருள்ராஜ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம். இதையடுத்து சரியாகிவிடும் என்று நம்பிக்கை அளித்து, சப் இன்ஸ்பெக்டருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்திருக்கிறார்ககள்
இதனிடையே ஸ்டீபன் அருள்ராஜூக்கு மருத்துவ விடுப்பு முடிந்து இந்த மாதம் பணியில் சேர வேண்டும். ஆனால், உடல்நிலை சரியாகாததால் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 10ம் தேதி இரவு, எஸ்ஐ ஸ்டீபன் அருள்ராஜ் சாப்பிட்டு விட்டு வீட்டில் உள்ள தனது அறைக்கு தூங்கச் சென்றார். நேற்று காலை அவரது அறைக்கு மனைவி வயோலா சென்று பார்த்தபோது, அங்கு ஸ்டீபன் அருள்ராஜை காணவில்லை. தனது கணவரை காணவில்லை என்றதும், அவர் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்குள்ள மரத்தில் ஸ்டீபன் அருள்ராஜ் தூக்கிட்ட நிலையில் இருந்ததைக் கண்டு ஆடிப்போனார். அவரது உடலை பார்த்து மனைவி வயோலா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். எஸ்ஐ வாழ்க்கையை முடித்துக் கொண்டது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீசார், ஸ்டீபன் அருள்ராஜின் உடலை மரத்தில் இருந்து இறக்கியதுடன், அவரது சட்டை பையில் இருந்து அவர் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அதில் தனது உடல்நிலை உள்பட பல்வேறு தகவல்களை அவர் உருக்கமாக எழுதி இருந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications