ராணி மாதிரி வச்சிருந்தேனே.. கன்னியாகுமரியில் ஆண் நண்பருடன் ஓடிய மனைவி... கணவனின் கடைசி வீடியோ
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த 47 வயதாகும் பெஞ்சமின் என்பவர் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுனிதாவுக்கு 45 வயது ஆகிறது. இவர்களுக்கு திருமணம் ஆகி 19 வருடங்கள் ஆகிறது. மனைவிக்காக வெளிநாட்டில் இருந்து சம்பாதித்த பணத்தில் ஆசை ஆசையாக வீடு கட்டியுள்ளார். ஆனால் மனைவி இவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் ஓடிப்போய்விட்டாராம். இதனால் அவர் வீடியோ எடுத்து வெளியிட்டுவிட்டு, எடுத்த முடிவு, பலரை கலங்க வைத்துள்ளது.
கள்ளக்காதல் என்பது சமூகத்தில்மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தன்னை தாண்டி வேறு ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் மனைவி இருப்பதை தாங்கி கொள்ள முடியாத கணவன்கள், தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். இதேபோல் கணவனின் தவறான உறவால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அந்த சமயத்தில் தவறான முடிவுகளை எடுப்பதுஅதிகமாக உள்ளது. சில நேரங்களில் திருமணத்தை மீறிய உறவை ஏற்று வீட்டை விட்டு ஓடிப்போகும் சம்பவங்களும் நடக்கிறது. அப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சம்பவத்தால் கொத்தானார் என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ளது கொன்னக்குழிவிளை. இந்த பகுதியைச் சேர்ந்த 47 வயதாகும் பெஞ்சமின், இவர் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுனிதா (45). இவர்களுக்கு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியின் விருப்பத்தின் பேரில் கொன்னக்குழிவிளையில் இருந்த குடும்ப வீட்டை விற்று விட்டு தெற்கு மணக்காவிளையில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார் இந்தநிலையில் சுனிதாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து வெளிநாட்டில் இருந்த பெஞ்சமின் தட்டிக்கேட்டுள்ளார். அவருக்கும், அவரது மனைவி சுனிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுனிதா திடீரென வீட்டில் இருந்து போய்விட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவருக்கு எந்த தகவலும் இல்லை. இதனை அறிந்த பெஞ்சமின் ஆடிப்போனார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த பெஞ்சமின், மனைவி சுனிதா மாயமானது குறித்து இரணியல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சூழலில் நேற்று முன்தினம் மாலையில் தெற்கு மணக்காவிளையில் உள்ள வீட்டில் பெஞ்சமின் விஷம் குடித்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்
இதற்கிடையே உயிரிழக்கும் முன்பு பெஞ்சமின் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில், எஸ்பி அய்யா, 19 வருடங்களாக என் மனைவியை நான் ராணி மாதிரி வைத்திருந்தேன். ஆனால் அவள் கள்ளக்காதலனுடன் போய் விட்டார். கள்ளக்காதலனை விட்டு விடாதீர்கள். எனது மனைவி உறவினர், வக்கீல் ஒருவரும் என்னை மிரட்டினார்கள். ( என் சாவுக்கு காரணமான இவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கத்தாங்க..
அதை நான் மேலே இருந்து நிச்சயம் பார்ப்பேன். என்னை கொஞ்சம், கொஞ்சமாக மனைவியின் கள்ளக்காதலன் கொன்றுள்ளான், எஸ்பி அய்யா, அவனை விட்டு விடாதீங்க. வியாகுல மாதா அன்னையாக உங்களை கருதுகிறேன். நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு கதறி அழுத படி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் தான் வீடியோ வெளியிட்டு பெஞ்சமின் உயிரைவிட்டிருப்பது தெரிய வந்துள்ளதால், அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெஞ்சமின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications