Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரி அருகே மகன்களுக்கு திருமணம் ஆகாத ஏக்கம்.. நாகம்மாள் எடுத்த நம்ப முடியாத முடிவு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: மகன்களை பெற்ற பெற்றோருக்கு மட்டும் தான் தெரியும்.. திருமணம் செய்து வைப்பது எவ்வளவு சவாலானது என்று.. இன்றைக்கு பெண் குழந்தைகளை பெற்றவர்களை விட ஆண் குழந்தைகளை பெற்றவர்கள் திருமண விஷயத்தில் அதிக அழுத்தத்தை சந்திக்கிறார்கள். பலருக்கு பெண் கிடைப்பதே இல்லை.. இதனால் விரக்தியில் தவறான முடிவெடுப்பது நடக்கிறது. குளச்சல் அருகே மகன்களுக்கு திருமணமாகாத ஏக்கத்தில் மூதாட்டி செய்த சம்பவம் கன்னியாகுமரியையே ஆடிப்போக வைத்துள்ளது.

இன்றைக்கு ஒரு குழந்தை, இரு குழந்தைக்கு மேல் பல வீடுகளில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் பாலின விகிதாசாரத்தில் பெரிய குறைபாடு ஏற்பட்டுள்ளது. பல சமூகத்தில் திருமண வயதில் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அப்படியே இருந்தாலும் பெண்கள் நன்கு படித்து முன்னேறி இருக்கிறார்கள். இதனால் சராசரியான வேலை செய்யும், கூலி வேலை செய்யும் ஆண்களுக்கு பெண் கொடுக்க பலர் தயங்குகிறார்கள். ஏழையாக இருந்தாலும் பலர் தங்கள் மகளை டிகிரி படிக்க வைத்துவிடுகிறார்கள். இதனால் படிக்காமல் போன பலருக்கு பெண் கிடைப்பது சவாலாகி விட்டது. இன்றைக்கு பெண் வீட்டார், மணமகன் நன்கு படித்து நல்ல வேலையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Kanyakumari marriage

இன்றைக்கு நல்ல வேலையில் இல்லாத இளைஞர்கள் திருமணம் செய்வது என்பது இப்போதைய சூழலில் சாத்தியம் இல்லாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக கூலி வேலை செய்யும் இளைஞர்களுக்கு பெண் கிடைப்பதே இல்லை. இதனால் பல இளைஞர்கள் ஏன் படிக்காமல் போனதால் விரக்தியில் இருக்கிறார்கள். அதேநேரம் நன்கு படித்து நல்ல வேலையில் இருந்தாலும், அழகாக இருக்க வேண்டும், குறைந்த வயதாக இருக்க வேண்டும்.. எந்த கடனும் இருக்கக்கூடாது.. சொந்த வீடு இருக்க வேண்டும்.. லட்சங்களில் சம்பாதிக்க வேண்டும் என்கிற அளவிற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டது.

இதனால் நன்கு சம்பாதித்தாலும், வயது, தோற்றம் காரணமாக பணக்காரர்களுக்கே பெண் கிடைப்பதும் சவாலானது தான். இந்நிலையில் பெண் கிடைக்காத விரக்தியில் சிலர் தவறான முடிவு எடுக்கிறார்கள். அப்படித்தான் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தாய் தவறான முடிவெடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மனைவி நாகம்மாள். இந்த தம்பதிக்கு 4 மகள்களும், 3 மகன்களும் இருக்கிறார்கள். இதில் மகள்கள் அனைவருக்கும், ஒரு மகனுக்கும் திருமணமாகி தங்களது குடும்பத்துடன் தனித்தனியே வசித்து வருகின்றனர். இதற்கிடையே செல்லையா இறந்து விட்டார்.

இதனால் நாகம்மாள் திருமணமாகாத தனது 2 மகன்களுடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் சமீபகாலமாக 2 மகன்களுக்கும் திருமணம் ஆகவில்லையே என்று அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாகம்மாள் வருத்தப்பட்டு வந்தாராம். 70வயதாகிவிட்டதால், பிள்ளைகளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட நாகம்மாளின் ஆசை நிறைவேறவே இல்லை.. இதனால் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த நாகம்மாள் தவறான முடிடுத்தார்.

இதன்படி நேற்று முன்தினம் வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்ற நாகம்மாள் மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றியதுடன்,தீ வைத்துக் கொண்டு உயிரை விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து குளச்சல் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் நாகம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன்களுக்கு திருமணமாகாத ஏக்கத்தில் மூதாட்டி உயிரை விட்ட சம்பவம் குளச்சலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரியில் இப்படி என்றால், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த மே 1ம் தேதி திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் தாய், மகன் உயிரை விட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் கிருஷ்ணன் கோவில் சந்து பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். அவருடைய மனைவி ஜெயாவுக்கு 64 வயது ஆகிறது. சுப்பிரமணியன் ஜெயா தம்பதிக்கு 34 வயதில் வினோத் பிரபு என்ற மகன் இருந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அதன்பிறகு வீட்டில் தாயும், மகனும் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். வினோத் பிரபு கூலி வேலை செய்து வந்திருக்கிறார்.

மே 1ம் தேதி அன்று இவர்களது நீண்ட நேரமாக பூட்டிக்கிடந்திருக்கிறது. வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது படுக்கை அறையில் ஜெயாவும், வினோத்பிரபுவும் வாயில் நுரை தள்ளி உயிரிழந்து கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர் வினோத்பிரபுவுக்கும் திருமணத்துக்கு பெண் கிடைக்கவே இல்லையாம். இதனால விரக்தி அடைந்த தாயும், மகனும் மருந்து குடித்து உயிரை விட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+