ஹனிமூன் சென்ற இடத்தில் நண்டு குழம்பு சாப்பிட்ட புதுமணப் பெண் பலி.. ரிசார்ட்டில் நடந்தது என்ன?
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஹனிமூன் சென்ற புதுமணப் பெண் நண்டு குழம்பு சாப்பிட்டதும் பலியான நிலையில் அப்போது நடந்தது என்ன என்பது குறித்து அந்த ரிசார்ட் மேனேஜர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். பொறியாளரான இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவரது மனைவி கிருபா (25).

இவர்கள் இருவரும் கன்னியாகுமரியில் தமிழக கேரள எல்லையில் நெட்டா பகுதியில் உள்ள சிற்றார் அணையின் கரையில் அமைந்துள்ள விடுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தேனிலவுக்காக வந்து தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் விடுதியில் வழங்கப்பட்ட நண்டு உணவை தினேஷ் குமாரும் கிருபாவும் சாப்பிட்டுள்ளனர், அப்போது புதுப்பெண் கிருபாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தன்னிடம் வைத்திருந்த மருந்துகளை கிருபா சாப்பிட்டுள்ளார்.
எனினும் கிருபாவுக்கு மூச்சுத்திணறல் சரியாகவில்லை. சிறிது நேரத்தில் அவருடைய நிலைமை மிகவும் மோசமடைந்ததால் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கிருபா அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதுகுறித்து கடையாலுமூடு காவல் துறையினர் உயிரிழந்த கிருபாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுதியில் வழங்கப்பட்ட உணவால் உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தப்படுகிறது.
கிருபாவுக்கு திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே ஆகிய நிலையில் புதுமணப்பெண் உயிரிழந்தது குறித்து பத்பநாபபுரம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். தேனிலவுக்காக வந்த இடத்தில் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கிருபாவின் உடலை பார்த்து அவரது கணவரும் உறவினர்களும் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.
இந்த சம்பவம் குறித்து ரிசார்ட் மேலாளர் கூறுகையில் புதுமண தம்பதியர் அன்றைய தினம் மதிய உணவை அவர்களது அறைக்கே கொண்டு வருமாறு கூறினர். அவர்கள் ஆர்டர் சொன்ன உணவுகளையே ரூம் பாய் கொண்டு போய் கொடுத்தார். அப்போது நண்டு குழம்பை சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனே கையில் இருந்த மருந்துகளை சாப்பிட்டார். ஆனாலும் மூச்சுத்திணறல் நிற்கவில்லை. இதையடுத்து சில மணி நேரம் கழித்துதான் அந்த பெண்ணின் கணவர் எங்களிடம் வந்து தகவலை சொன்னார். உடனே குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு அந்த பெண் உயிரிழந்தார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் கையில் இருந்த மருந்துகளை சாப்பிடாமல் உடனே மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தால் கிருபாவை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் சொன்னதாக ஓட்டல் மேலாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த கிருபாவின் பெற்றோர் மகளின் இறப்பு குறித்து பேச மறுத்துவிட்டனர். அந்த பெண்ணுக்கு மூச்சிறைப்பு நோய் இருந்ததாகவும் அதற்காக அவர் மாத்திரைகளை உட்கொண்டு வந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்தது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கிருபாவின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவரும்.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications