அடுத்தவர் மனைவிக்கு முத்தம் தந்த பாஜக விஐபி.. மளிகை கடைக்குள் அக்கப்போரு! திகைத்த கன்னியாகுமரி கணவர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பாஜக பிரமுகரை, போலீசார் இன்னமும் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள். ஆனால், மளிகை கடை வைத்து நடத்தி வந்த பெண்ணையும் காணவில்லை என்ற புது தகவல் வெளியாகியிருக்கிறது.. இதனால், அந்த பெண்ணையும் அருமனை போலீசார், தேடி வருகிறார்களாம்.
அருமனை அருகே பத்துகாணி குமாரபவன் பகுதியை சேர்ந்தவர் அனிகுட்டன் என்கிற அனில்குமார்.. 48 வயதாகும் இவர், அந்த பகுதியிலேயே ஆட்டோ ஓட்டி வருகிறார்.. இவரது மனைவி உமாவுக்கு 40 வயதாகிறது (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

வேறுபாடுகள்: கணவன் - மனைவிக்கு இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகவும், இதன்காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.. இதில், பத்துகாணி சந்திப்பு பகுதியில், மளிகை கடை ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார் உமா.. ஆட்டோ ஓட்டாத நேரங்களில் இந்த மளிகை கடையில், அனில்குமாரும் இருப்பாராம்.
இந்தநிலையில் சம்பவத்தன்று, பத்துகாணி நிஜாபவன் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் மதுகுமார் என்பவர், உமாவின் மளிகை கடைக்கு சென்று, உமாவுக்கு முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது ..
தகராறு: மனைவிக்கு இன்னொருவர் முத்தம் கொடுப்பதை பார்த்ததும் அனில்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். அத்துடன் மனைவியை திட்டியதுடன், கண்டித்தும் இருக்கிறார்.. இதனால், தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த உமா, கணவரை கம்பால் விளாசி தள்ளிவிட்டாராம்.. இந்த தாக்குதலில் அனில்குமார் படுகாயம் அடைந்து விழுந்துள்ளார்.
பிறகு மறுநாள் பாஜக மதுகுமார், அனில்குமாரிடம் தகராறில் ஈடுட்டதோடு தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.. அத்துடன், மிகப்பெரிய கத்தியால், அனில்குமாரை வெட்ட முயன்றுள்ளார். ஆனால், இதிலிருந்து அதிர்ஷ்டவசமாக அனில்குமார் தப்பித்துக் கொண்டார் என்றாலும், பலத்த காயமடைந்தார்..
தீவிர சிகிச்சை: மனைவியிடமும், மதுகுமாரிடமும், அடிவாங்கிய அனில்குமார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடந்தது.. பிறகு, நடந்த சம்பவங்கள் தொடர்பாக அனில்குமார் ஆறுகாணி போலீசில் புகார் தந்தார்..
அதன்பேரில் போலீசார் உமா மற்றும் மதுகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.. அத்துடன், பாஜக பிரமுகர் மது குமார், அனில்குமாரின் மனைவி உமாவை தேடி வருகிறார்கள்.. இருவரும் ஒன்றாகவே தலைமறைவாகிவிட்டார்களா? அல்லது தனித்தனியாக மறைந்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை..
பாஜக நிர்வாகி: இதில், பாஜக பிரமுகர் மதுகுமாருக்கு 52 வயதாகிறது.. ஆறுகாணி கிளை பாஜக செயலாளராக இருப்பவராம்.. இவர் ஏற்கனவே கடையாலுமூடு பேரூராட்சி 9வது வார்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications