"முதலமைச்சர் ஐயா.. நான் தற்கொலை செய்ய போறேன்.. நீங்கதான் நியாயம் சொல்லணும்".. கதறிய பெண்
முதலமைச்சருக்கு ஒரு பெண் கண்ணீர் விட்டு உதவி கேட்டுள்ளார்
கன்னியாகுமரி: முதலமைச்சர் ஐயா, இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய போவதாகவும் முதலமைச்சர் ஐயா நடவடிக்கை எடுங்கள் என பெண் ஒரு வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அடுத்த முட்டம் பகுதியை சேர்ந்தவர் லலிதா... 37 வயதாகிறது.. இவருக்கும் முட்டம் பகுதியை சேர்ந்த பாபு என்பவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
இந்த தம்பதிக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்... ஆரம்பத்தில் சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருந்தது.. இதற்கு பிறகுதான், கணவர் பாபு திசை மாற ஆரம்பித்தார்..

அட்டகாசம்
கடந்த ஒரு வருட காலமாக மனைவியை விட்டுவிட்டு கள்ளகாதலியுடன் குடும்பமே நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு, லலிதாவின் வீட்டிற்கு வந்த, கள்ளகாதலியின் உறவினர்கள், லலிதாவை தாக்கியிருக்கிறார்கள்.. மேலும், அவரது வீட்டை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்துள்ளதாகவும் தெரிகிறது.. இதனால் படுகாயமடைந்த லலிதா, குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்...

மகளிர் போலீஸ்
இது தொடர்பாக லலிதா மணவாளக்குறிச்சி போலீசிலும் புகார் தந்தார். ஆனால் போலீசார் அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.. எனவே, குளச்சல் மகளிர் காவல் நிலைய கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார் லலிதா.. அங்கேயும் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி தவித்த லலிதா, தற்கொலை முடிவை எடுத்துள்ளார்..

முதலமைச்சர் ஐயா
தன்னுடைய 2 மகள்களுடன் கதறி அழுதபடி முதலமைச்சர் ஐயா நடவடிக்கை எடுங்கள் என்று கூறி ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் இரு மகள்களுடன் லலிதா கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே பேசும்போது, "3 பேரும் தற்கொலைதான் செய்துக்கணும்.. 18 வருஷமா வீட்டுக்குள்ளே வாழ்ந்துட்டேன்.. எனக்கு உலகம் என்னன்னே தெரியாது.. இந்த 2 பெண்களும் வளர்ந்துட்டாங்க.. நான் ஸ்டேஷன் ஸ்டேஷனா அலையறேன்.. என் பிள்ளைகளும் படிப்பும் பாழாயிடுச்சு...

பாதுகாப்பு
நைட் நேரம் தூக்கமே எங்களுக்கு இல்லை.. எந்த நேரம் வந்து எங்களை தாக்குவாங்களோ தெரியல.. பிள்ளைகளை பாதுகாப்பா வெச்சுக்க முடியல.. என் வீட்டுக்கு ஒரு பாதுகாப்பும் இல்லை.. ஒரு தாயாக இருந்தும், என் பிள்ளைகளின் ஒருவேளை பசியாத்த என்னால முடியல.. எந்த ஆதரவும் இல்லை.. முதல்வர் ஐயா நீங்கதான் ஒரு நியாயம் தரணும்.. " என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications