கன்னியாகுமரியில் எந்த கணவனும் பார்க்கக்கூடாத கோலத்தில் மனைவி.. வாயை பிளந்த ஊர் மக்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி வேலை காரணமாக வெளியூர் சென்று வந்தார். இதனிடையே லாரி டிரைவரின் மனைவிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி லாரி டிரைவர் இல்லாத நேரத்தில் காதலனை அழைத்து ஜாலியாக இருந்துள்ளார் அவரது மனைவி. அப்படி ஒரு நாள் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர், வீட்டு அறையை பூட்டி இருவரையும் போலீசில் சிக்க வைத்தார்.
திருமணத்தை மீறிய உறவு பொதுவாகவே சிக்கலானது.. கையும் களவுமாக மாட்டினால் அசிங்கமாகும்.. சமூகம் மொத்தமாக புறக்கணிக்கும்.. என்ன தான் சட்டம் இவர்களை தண்டிக்காது என்றாலும் பொதுமக்கள் தண்டிப்பார்கள். ஒருவரின் நடத்தை பற்றியது என்பதால், கள்ளக்காதல் என்பது ஆண் பெண் இருவருக்குமே பெரிய அவமானத்தையே தரும். ஆனால் அதற்கு பலர் அஞ்சுவது இல்லை.. துணிந்து செயல்படுகின்றனர். அப்படி ஒரு கள்ளக்காதல் ஜோடி ஜாலியாக இருந்த போது, பெண்ணின் கணவரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்த 35 வயது லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு 32 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த தம்பதி கன்னியாகுமரி மாவட்டம் சென்னித் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். லாரி டிரைவரின் மனைவி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். அங்கு அவருக்கும், பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்நிலையில் சம்பம் நடந்த அன்று இரவு வாலிபர், கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றார். அங்கு லாரி டிரைவர் இல்லாததால் அவர் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே வேலை முடிந்ததும் லாரி டிரைவர் அங்கு வர, மனைவி, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எனினும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட நினைத்த டிரைவர், வீட்டின் அறை கதவை பூட்டி திருடன், திருடன் என கத்தினார். மேலும் மார்த்தாண்டம் போலீசாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார்கள். உடனே திரண்டு வந்த உறவினர்கள் அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். அந்த சமயத்தில் வந்த போலீசார், வாலிபரை மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது தான் திருடவில்லை என்றும், எனக்கும் அந்த பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அந்த ரீதியில் அவரை சந்திக்க சென்றதாகவும் போலீசாரிடம் வாலிபர் உண்மையை கூறினார். பிறகு இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் போது, தடம் மாறி சென்ற மனைவியுடன் இனி வாழ மாட்டேன் என டிரைவர் திட்டவட்டமாக கூறிவிட்டு சென்றார். மேலும் அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications