மனைவிக்கு வேறு ஆணுடன் தகாத உறவு.. தர்ம அடி கொடுத்த கள்ளக்காதலன்.. மாரிமுத்து விபரீத முடிவு
கன்னியாகுமரி: தகாத உறவால் வேறு ஒருவருடன் சென்ற மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் இருவரும் சேர்ந்து தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி இருப்பதாக கூறி கன்னியாகுமரி எஸ்பி ஆபிஸ் முன்பு மாரிமுத்து என்பவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலபுத்தேரி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. மொபைல் பஞ்சர் கடை நடத்தி வரும் இவரது மனைவி செல்வி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.தற்போது இவர்களுக்கு சோபியா தேவி என்ற பெண் குழந்தை உள்ளது,

வேறு ஒருவருடன் தகாத உறவு
இந்நிலையில் செல்விக்கும் அப்பகுதியை சேர்ந்த வேல் முருகன் என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாரிமுத்து கேள்வி எழுப்பியதால் வீட்டை விட்டு வெளியேறிய செல்வி வேல்முருகனுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

கள்ளக்காதலன் அடி
இந்நிலையில் பெண் குழந்தை இருப்பதை சுட்டி காட்டி செல்வியை தன்னுடன் வந்துவிடுமாறு மாரிமுத்து அழைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், செல்வி மற்றும் சிலர் இணைந்து மாரிமுத்து மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்களாம். மாறிமுத்துவை தாக்க வேல்முருகனின் கூட்டாளிகள் முயற்சி மேற்கொண்டதால் மாரிமுத்து தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

குழந்தையுடன் வந்தார்
இது குறித்து ஏற்கனவே காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில் ஏற்கனவே மனைவி பிரிந்து சென்ற நிலையில் தற்பித்து குழந்தையை கூட பார்க்க முடியாமல் பயந்து பயந்து வாழும் நிலை மாரிமுத்துவுக்கு ஏற்பட்டதாம். இதனால் விரக்தி அடைந்த மாரிமுத்து இன்று நாகர்கோவிலில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது தாய் மற்றும் குழந்தையுடன் வந்தார்.

போலீஸ் தடுத்தனர்
அப்போது தான் கையோடு கொண்டு வந்த டீசலை தலையில் விட்ட மாரிமுத்து தீ குளிக்க முயற்சித்தார், அப்போது கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்த போலீசார் மாரிமுத்து கையில் இருந்த டீசல் கேனை பறித்து அவர் மீது தண்ணீரை விட்டு காப்பாற்றினார் இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது, மேலும் மாறிமுத்துவை காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications