செத்து போன்னு அம்மா சொல்றாங்க.. செத்துட்டா என்ன செய்வே.. காதலனிடம் கேட்கும் பெண்.. வைரல் ஆடியோ
காதல் விவகாரத்தில் இளம் பெண் மர்ம மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது
கன்னியாகுமரி: "செத்து போ.. செத்து போ..ன்னு என் அம்மா சொல்றாங்க.. அப்படி நான் செத்துபோயிட்டா நீ என்ன செய்வே" என்று இளம்பெண் காதலனிடம் கேட்கும் ஆடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி வருவதாக கூறப்படுவது பரபரப்பை தந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பகுதி ஆரோக்கியபுரம். இங்கு வசித்து வந்த 18 வயது இளம்பெண் அனுஷ்யா. ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் போன 24ம் தேதி அனுஷ்யா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது சம்பந்தமாக போலீஸ் விசாரணையில், "என் மகள் வீட்டில் இருந்து 23ம் தேதி 2000 ரூபாயை திருடிட்டாள்.. அதுக்காக நான் சத்தம் போடவும், எலி மருந்தை குடிச்சி தற்கொலை செய்துக்கிட்டாள்" என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசாரும் அனுஷியாவின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சமயத்தில்தான், அனுஷியாவின் தோழிகள் பகீர் தகவல்களை வாட்ஸ்அப், ஃபேஸ்புக்குகளில் வெளியிட்டனர். அதில், அனுஷியாவின் தற்கொலை செய்யவில்லை.. அது கொலை என்று பதிவிட்டதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அனுஷ்யா ஒரு இளைஞனை காதலித்தாராம்.. அந்த இளைஞன் வேற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதாகவும் தோழிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே அனுஷ்யா தன்னுடைய காதலனுடன் பேசும் ஆடியோ ஒன்றும் இணையத்தில் பரவியுள்ளது. அதில், "என்கிட்ட என் அம்மா பேசும்போதெல்லாம் 'செத்துப்போ' செத்துப்போ'ன்னு சொல்றாங்க.. அதனால் எனக்கு தற்கொலை செய்துக்கலாமான்னு தோணுது.. அப்படி நான் தற்கொலை செய்துக்கிட்டால், நீ என்ன செய்வே?" என்று அந்த ஆடியோவில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அனுஷ்யாவின் தோழிகள் இந்த மரணம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications