என் கணவரின் மனைவி என் அம்மாதான்.. அதிர வைத்த 2 குழந்தைகளின் தாய்.. போலீஸை நாடிய கணவர்!
தன்னை ஏமாற்றிய மனைவி மீது கணவன் புகார் அளித்துள்ளார்
Recommended Video
கன்னியாகுமரி: கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார் 2 குழந்தைகளின் தாய்... ஆனால் "என் புருஷனுக்கு மனைவி என் அம்மாதான்" என்று பாயிண்ட் பாயிண்டாக பேசி போலீசாரையே கதிகலங்க வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஒரு சமையல்காரர். கல்யாணமாகி 10 வருடமாகிறது.. ப்ரீத்தி என்ற மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் குடும்ப வறுமை காரணத்தால் வேலைக்கு வெளிநாடு போய்விட்டார் ரமேஷ்.
2017 -ம் வருஷம் சமையல் வேலைக்கு துபாய் சென்றார். 2 வருடம் கழித்து, சமீபத்தில் ஊர் திரும்பினார். அப்போது, வீட்டில் 2 குழந்தைகளையும் பூட்டி வைத்து விட்டு ப்ரீத்தி வெளியே சென்றுள்ளதாக தெரிகிறது. இரவு வீட்டிற்கு வந்த மனைவியிடம், "எங்கே போய்ட்டு வர்றே" என்று ரமேஷ் கேட்டுள்ளார். இது தகராறாக வெடித்துள்ளது.

இஷ்டம் இல்லை
இந்த பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. ஆனால் ப்ரீத்தி இதையே சாக்காக வைத்து கொண்டு, கணவர், குழந்தைகளுடன் வாழ இஷ்டம் இல்லை.. தனியாக வாழ விரும்புவதாக சொன்னார். இதைக் கேட்டு ரமேஷ் அதிர்ச்சி அடைந்தாலும், பலமுறை ப்ரீத்தியை சமாதானம் செய்து வாழ கூப்பிட்டார். ஆனால் முடியவில்லை. இந்நிலையில், பிரீத்தி இளைஞர் ஒருவருடன் தனியாக வசித்து வருவதாக ரமேஷூக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ந்து போன ரமேஷ், குழித்துறை மகளிர் போலீசில் புகாரளித்தார். ஆனால் அங்கும் ப்ரீத்தி பிடிவாதம் பிடித்தார்.

கல்யாணம்
அதனால் ரமேஷ், மாவட்ட எஸ்பியிடம் ஒரு புகார் அளித்தார். அதில் "எனக்கு ப்ரீத்தியுடன் கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. ஆனால் அதை மறைத்து, மோசடியாக முளகுமூடு காடுவெட்டி பகுதியை சேர்ந்த 26-வயதான அகில் என்ற இளைஞரை ப்ரீத்தி கடந்த 28-ம் தேதி சர்ச்சில் வைத்து தாலி கட்டி கல்யாணம் செய்து கொண்டுள்ளார். தன்னை திருமணம் செய்ததை மறைத்து மீண்டும் மோசடியாக கள்ளக்காதலனை திருமணம் செய்து கொண்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டிருந்தார்.

அம்மாதான் மனைவி
இதுகுறித்து போலீசார் பிரீத்தியிடம் விசாரித்தனர். அதற்கு அவர், "நான் ரமேஷை முறையாக கல்யாணம் செய்யவில்லை. கல்யாணம் செய்து தரும்போது எனக்கு வயசு 15தான். ரிஜிஸ்டர் ஆபீசில், என் அம்மாவின் பெயர், அவரது சர்ட்டிபிகேட், அவரது போட்டோக்களை ஒட்டிதான் கல்யாணம் ஆனது. அதனால் சட்டப்படி என் அம்மாவையே அவர் கல்யாணம் செய்துள்ளார். அவருடன் வாழ்ந்து 2 குழந்தைகளுக்கும் நான் தாயானாலும், இப்போது அகிலுடன் செய்து கொண்ட கல்யாணம்தான் சட்டபடி செல்லும். சட்டபடி நாங்கள் பார்த்துக்கொள்வோம்" என்றதும் போலீசார் விழிபிதுங்க விழித்தனர்.

பரிதாப குழந்தைகள்
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படியே கணவனும் மனைவியும் மாறி மாறி தகராறு, வாக்குவாதம் செய்து வருகின்றனர். ஆனால் அந்த இரு குழந்தைகளும் எதுவுமே புரியாமல் அம்மாவை பார்த்தபடியே பரிதாபமாக நிற்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications