10 நாட்கள் ஆகிவிட்டது.. கரூரை எட்டி கூட பார்க்காத தவெக தலைகள்.. விஜய் உட்பட எல்லோரும் ஆப்சென்ட்
கரூர்: கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் மக்கள் பலர் பலியான நிலையில், இதுவரை விஜய் உட்பட தவெக மூத்த நிர்வாகிகள் யாரும் மருத்துவமனைக்கு செல்லாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 10 நாட்கள் ஆகியும் விஜய் தவெக நிர்வாகிகள் யாருமே பாதிக்கப்பட்ட குடும்பங்களை கூட பார்க்காதது விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
முக்கியமாக இதில் விஜய் கரூர் செல்ல கூடாது என்று போலீஸ் சொல்லவில்லை. அரசு சொல்லவில்லை. தேவையின்றி இதில் வழக்கு போட்டு அனுமதி கேட்டு கரூர் செல்லப்போவதாக விஜய் தரப்பு சொல்கிறது. ஆனால் விஜய் தரப்பு இன்னும் வழக்கும் தொடுக்கவில்லை. கரூர் செல்லவும் விரும்பவில்லை.

கரூரில் நடைபெற்ற அரசியல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக கரூர் FIR
அதில், "அரசியல் பலத்தை காட்டும் நோக்கில் கூட்டம் திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக துவக்கப்பட்டது. தொண்டர்கள் மரங்கள் மற்றும் கடைகள் மீது ஏறி அமர்ந்தனர். இதில் மரக்கிளைகள் முறிந்து கீழே நின்றவர்கள்மீது விழுந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து எச்சரிக்கைகளையும் புறக்கணித்ததாக, ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் மீது குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் காத்திருத்தல், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளின் இல்லாமை, கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அழுத்தம் ஆகியவற்றால் மக்கள் உடல் நிலை சோர்ந்து கீழே விழுந்ததாகவும், அவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாகவும் எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகார அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
கரூர் கொடூரம்
கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கரூரில் விஜய் பேசத் தொடங்கிய போதே பலரும் மயக்கம் அடைந்த நிலையில், அவர் பிரச்சாரத்தை முடித்து திருச்சியில் இருந்து தனி விமானம் மூலமாக சென்னை திரும்பினார். விஜயின் இந்த செயல் கடும் விமர்சனங்களை சந்தித்தது.
சென்னைக்கு சென்ற போது பத்திரிகையாளர்களை கூட சந்திக்காத விஜய், சம்பவம் நடந்து 4 மணி நேரத்திற்கு பின் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டார். கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் மக்கள் பலர் பலியான நிலையில், இதுவரை விஜய் உட்பட தவெக மூத்த நிர்வாகிகள் யாரும் மருத்துவமனைக்கு செல்லாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூத்த தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்று பலர் நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து விட்டனர். ஆனால் தவெக நிர்வாகிகள் யாருமே பாதிக்கப்பட்ட குடும்பங்களை கூட பார்க்காதது விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
10 நாட்கள் ஆகிவிட்டது
கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் மக்கள் பலர் பலியான நிலையில், இதுவரை விஜய் உட்பட தவெக மூத்த நிர்வாகிகள் யாரும் மருத்துவமனைக்கு செல்லாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 10 நாட்கள் ஆகியும் விஜய் தவெக நிர்வாகிகள் யாருமே பாதிக்கப்பட்ட குடும்பங்களை கூட பார்க்காதது விமர்சனங்களை சந்தித்து உள்ளது.












Click it and Unblock the Notifications