நான்தாங்க "சின்ன வீடு".. ஞாபகம் இருக்கா.. அங்க பாருங்க ஒருத்தர் சிரிக்கிறாரு.. கரூரை கலக்கிய பபிதா!
கரூர்: "என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா? பாக்யராஜ் படத்தில் சின்னவீடா வந்தேனே.. அது நான்தான்" என்று கவர்ச்சி நடிகை பபிதா கரூரில் அதிமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் மு. தம்பிதுரை போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு சேகரிக்க நடிகை பபிதா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது சொன்னதாவது:
இத்தனை முறை ஆட்சியில் திமு இருந்தும் ஏதாவது திட்டத்தை முறையாக செயல்படுத்தினாங்களா? ஆனால் இதுவே அம்மா ஆட்சியில், சத்துணவு திட்டம், பசுமை வீடுகள், முதியோர் உதவித் தொகை, அம்மா உணவகம், 20 கிலோ ரேசன் அரிசி.. இப்படி எத்தனையோ திட்டங்கள் இன்றுவரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரச்சாரம்
திமுக ஆட்சிக்கு வந்தால் அவங்க குடும்பம் மட்டும் முன்னேறும். இதுவே அதிமுக ஆட்சி நீடித்தால் ஏழை எளியவர்கள் எல்லாரும் நன்றாக இருப்பார்கள்" என்றார். தொடர்ந்து பேசிய பபிதா தன்னை பற்றியும் சிறிதாக அறிமுகப்படுத்தி கொண்டார். ஏனெனில் பிரச்சாரத்தில் பேசி கொண்டிருப்பது யார் என்றே நிறைய பேருக்கு தெரியாமலேயே நின்றிருந்தனர்.

சின்ன வீடு
உடனே பபிதா, "என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா? நாயகன் படத்தில் வரும் "நான் சிரித்தால் தீபாவளி" என்ற பாடலுக்கு நான் டான்ஸ் ஆடி இருக்கிறேன். பாக்யராஜ் படத்தில் சின்னவீடாக நடித்திருக்கிறேன். அங்க பாருங்க.. சின்ன வீடுன்னு சொன்ன உடனேயே ஒருத்தர் எப்படி சிரிக்கிறார்? ஐயோ.. நிஜ சின்ன வீடு இல்லீங்க.. படத்தில அப்படி நடிச்சிருப்பேன்" என்றார்.

ஸ்டார் பேச்சாளர்கள்
பொதுவாக, ஜெயலலிதா இருந்தவரை ஏராளமான நடிகை, நடிகர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். குறிப்பாக ராமராஜன், விந்தியா, நமீதா, பாடகி அனிதா குப்புசாமி, ஆர்த்தி போன்றோர் ஸ்டார் பேச்சாளர்களாக இருப்பார்கள். இந்த முறை இவர்கள் வாய்ப்பு கேட்டும் மறுக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

கவர்ச்சி நடிகை
அதே சமயத்தில் எப்போதோ அதாவது 80, 90'களில் கவர்ச்சி நடிகையாக நடித்த பபிதாவை எல்லோருமே மறந்து போன நிலையில், இப்போது பிரச்சாரம் செய்ய வைத்திருப்பது மட்டும் சரியா என்று கேள்வி எழுப்புகிறார்கள். எனினும் பபிதா கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications