ஹாய் மச்சான்ஸ்.. காய்ஞ்ச மண்ணு பச்ச மண்ணா மாறணுமா? - நமீதா 'கூல்' பிரசாரம்
கரூர்: 'தாமரை அரவக்குறிச்சியில் மலர்ந்தால் தமிழகம் வளரும்' என்று நடிகை நமீதா பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு வாக்கு சேகரித்தார்.
Recommended Video
அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு வாக்கு கேட்டு நடிகை நமீதா இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய நமீதா, சிங்கம் மாதிரி அதிகாரி அரவக்குறிச்சியில் இருந்தால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும். அரவக்குறிச்சி தொகுதி காய்ந்த மண்ணு பச்சை மண்ணாக மாற, அண்ணாமலைக்கு தாமரைக்கு ஓட்டு போடுங்க. அண்ணாமலை உங்களுடைய சொந்தப் பிள்ளை. உங்களுடைய சொந்த ஊர்க்காரர். அவருக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

அரவக்குறிச்சியில் தாமரை மலர்ந்தால், தமிழகம் வளரும். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு கம்பீரமான, திறமையான தலைவர். அவரைப் போலவே எல்லா திறமைகளும் அண்ணாமலைக்கு உள்ளது.

ஆகவே, உங்கள் வேட்பாளர் அண்ணாமலைக்கு வாக்களித்து அவரை வெற்றிப் பெற வையுங்கள்' என்று நடிகை நமீதா பேசி வாக்கு சேகரித்தார். ஆனால், இதில் நமக்கு என்ன புரியலைனா, நமீதா வாக்கு சேகரித்த வண்டியிலும் வேட்பாளர் அண்ணாமலையை காணோம். அந்த ஏரியாவிலும் காணோம்.












Click it and Unblock the Notifications