நாடு நல்லா இருக்கணுமா.. அப்ப செந்தில் பாலாஜியை ஓரங்கட்டுங்க.. இது ஜக்கம்மா வாக்கங்க ஜக்கம்மா வாக்கு!
Recommended Video
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு குடுகுடுப்பைகாரர் போல் அதிமுக நிர்வாகி ஒருவர் வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது.
அரவக்குறிச்சியில் வரும் மே 19-ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் ஏற்கெனவே அத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருந்த செந்தில் பாலாஜி தற்போது திமுக வேட்பாளராக களம் காண்கிறார்.
இவரை எதிர்த்து செந்தில்நாதன் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தேர்தல் தேதி அறிவித்தவுடன் அதிமுக, திமுக ஆகியன பம்பரம் போல் சுழன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன.

நூதன பிரசாரம்
இந்த இடைத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு வித்திடும் என்பதால் வேட்பாளர்கள் சுழன்று சுழன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் அரவக்குறிச்சியில் மக்கள் ஒரு நூதன பிரசாரத்தை சந்தித்தனர்.

ஜக்கம்மா வாக்கு
பொதுவாக குடுகுடுப்பைகாரர் வாக்கு பலிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். அதை பயன்படுத்தி அதிமுக நிர்வாகி ஒருவர் வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். குடுகுடுப்பைகாரர் வேடத்தில் சென்ற அவர் பொதுமக்களிடம் ஜக்கம்மா வாக்கு என கூறினார்.

செழிப்பா
அவர் பேசுகையில்ஜெயித்தவுடன் தொகுதிகளுக்கு அடிக்கடி வருவார்கள் (ஜெயித்தவுடன் தொகுதி பக்கமே வருவதில்லை என வாக்காளர் குற்றச்சாட்டுக்கு பதில்) புள்ளக்குட்டிகள் எல்லாம் செழிப்பா இருக்க வேண்டும், நாடு நல்லாயிருக்க வேண்டும்.

இது ஜக்கம்மா வாக்கு
எதிரிகளோட, துரோகிகளோட பார்வை உங்கள் மேல பட்டுடிச்சி. செந்தில் பாலாஜியோட பார்வையிலிருந்து நீங்கள் விலக வேண்டும். அதற்காக நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்க. இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள். இது ஜக்கம்மா வாக்குங்க ஜக்கம்மா வாக்கு என்றார் அந்த நிர்வாகி.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications