பாமக குற்றச்சாட்டுகள் எல்லாம் சும்மா அரசியலுக்காக சொன்னது… உண்மையை உடைத்த தம்பிதுரை
கரூர்:அதிமுக மீதும், அமைச்சர்கள் மீதும் கடந்த காலங்களில் அரசியலுக்காக பாமக குற்றச்சாட்டுகளை கூறியிருக்கலாம் என்று லோக்சபா துணை சபா நாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக, பாஜக மற்றும் பாமக கூட்டணி குறித்து அரசியல் தரப்பில் நாள்தோறும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதிமுகவுடன் ஏன் கூட்டணி என்பது குறித்து அன்புமணி அளித்த செய்தியாளர்கள் சந்திப்பும் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், அரசியலுக்காக பாமக குற்றச்சாட்டுகளை இதற்கு முன்னால் கூறியிருப்பதாக லோக்சபா துணை சபா நாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

தம்பிதுரை பேட்டி
தொடர்ந்து அவர் கூறியதாவது: திமுக, காங்கிரஸ் கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி. அந்த கூட்டணியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

திமுக பொதுஎதிரி
பொது எதிரியான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்தவே, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அதிமுக மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை.

அதிமுகவின் கொள்கை
கூட்டணிக்கான கொள்கைகளை விட்டு கொடுக்கவில்லை. மத்திய அரசுடன் இணைந்தால் தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வரலாம்.

அரசியலுக்காக குற்றச்சாட்டுகள்
கடந்த காலங்களில் அதிமுக மீதும் அமைச்சர்கள் மீதும் பாமக குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறது. அவை அனைத்தும் அரசியலுக்காக அப்போது கூறியிருக்கலாம்.

வெற்றி நிச்சயம்
அதிமுக மீதோ, அதன் அமைச்சர்கள் மீதோ எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருட்டு! ஊழல் ஆதாரங்களை மறைக்க சதி? அன்புமணி கேள்வி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications