கரூர் மெடிக்கலில் தனியாக இருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞர்கள்.. கை, காலில் மாவுக்கட்டு

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் மருந்து கடையில் தனியாக இருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் பிடியில் இருந்து தப்ப முயன்ற போது, அவர்களின் கை, கால்களில் முறிவு ஏற்பட்டதால் கை, கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. பெண்ணிடம் நகை பறிக்க முயற்சித்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைப்பறிக்கும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. பைக்கில் ஹெல்மெட்டை அணிந்துகொண்டோ, தன்னுடைய முகத்தை காண்பிக்காமலோ இத்தகைய நகைப்பறிப்பு சம்பவத்தில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால் சாலையில் பெண்கள் தனியாக செல்வதற்கே பயப்படும் சூழல் இருக்கிறது.

karur robbery police

சமீபத்தில் கூட தீபாவளியையொட்டி மதுரையில் ஷாப்பிங் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெண்ணிடம் பைக்கில் மின்னல் வேகத்தில் வந்த நபர்கள் தாலி செயினை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. அவ்வப்போது இப்படி நகைப்பறிப்பு சம்பவங்கள் அரங்கேறுவதும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில், இதற்கு எல்லாம் ஒருபடி மேலே போய், மருந்தகத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோவில், "இரவு நேரத்தில் மருந்தகம் ஒன்றிற்கு இளைஞர் ஒருவர் வருகிறார்.

அந்த மருந்தகத்தில் பெண் மட்டுமே இருப்பதை ஏற்கனவே அந்த இளைஞர் தெரிந்து வைத்துள்ளார் போல. ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த அந்த பெண்ணிடம் மருந்து கேட்பது போல ஏதோ கேட்கிறார். அப்போது அந்த பெண் அருகில் வந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பது போல் தெரிகிறது. அப்போது திடீரென அந்த இளைஞர் பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பிடித்து இழுக்கிறார்.

எனினும் உடனே அந்த பெண் சுதாரித்துக் கொண்டாதால், செயினை பிடித்துக்கொண்டு உள்ளே விழுந்துவிட்டார். கத்தியபடி அந்த பெண் கீழே விழுந்துவிட்டார். இதனால் பதறிப்போன அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி செல்வது போல் வீடியோ பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில், போலீசார் கண்ணிலும் பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அந்த நபர் யார் என்று வீடியோவில் பதிவாகியிருந்த காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.

இதில் மெடிக்கலில் தனியாக இருந்த பெண்ணிடம் நகைப்பறிக்க முயன்றது ரஞ்சித் குமார் என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு உடந்தையாக சக்திவேல் என்ற நபரும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்ய சென்றனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதில் போலீசார் அவர்களை பிடிக்க சென்ற போது இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.

கை, கால்களில் அவர்களுக்கு அடி பட்டுள்ளது. தற்போது ரஞ்சித் குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் கால் மற்றும் கைகளில் மாவுக்கட்டு போடப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மெடிக்கலில் தனியாக இருந்த பெண்ணிடம் இளைஞர்கள் இருவர் நகைப்பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+