பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்... அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை பின்னடைவு..!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இந்த முடிவு பாஜக தரப்பை பொறுத்தவரை அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கும் வகையில் உள்ளது.

Bjp Candidate Annamalai setback in Aravakurichi constituency

கர்நாடகாவில் மாவட்ட எஸ்.பியாக இருந்த அண்ணாமலை, விவசாயம் செய்வதற்காக தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊரான கரூருக்கு வந்தார்.

இந்நிலையில், உங்களை போன்ற இளைஞர்கள் அரசியலில் இறங்கி பணியாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த நேரடி வேண்டுகோளை ஏற்று பாஜகவில் இணைந்து அரசியல் செய்து வந்தார் அண்ணாமலை.

தற்போது பாஜகவில் மாநில துணைத் தலைவராக உள்ள அண்ணாமலை, அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோவை எதிர்த்து போட்டியிட்டார். இந்நிலையில் தனது வெற்றி உறுதி என அவர் நம்பிக்கை தெரிவித்து வந்த நிலையில் இன்று காலை முதல் வெளியாகும் முடிவுகள் அண்ணாமலையை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தொடர் பின்னடைவை சந்தித்துள்ள அண்ணாமலை தரப்பு, இனி அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது.

அண்ணாமலை போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. பள்ளபட்டி, ஈசநத்தம், அரவக்குறிச்சி ஆகிய ஊர்களில் இஸ்லாமியர்களின் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+