"பூமிபூஜை"க்கு எதிர்ப்பு.. அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் பயமா.. திமுக எம்பியை சீண்டிய பாஜக

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டத்தில் 13 கோடி ரூபாயில் பல்வேறு திட்ட பணிகளை பூமி பூஜை செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பெரியார் சிலை அருகே நடந்த பூமி பூஜை நிகழ்வை தருமபுரி எம்பி செந்தில் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு நிகழ்ச்சிகளில் மத ரீதியான பூஜைகளை நடத்தக் கூடாது, என்றும் அதிலும் குறிப்பாக பூமி பூஜை நடத்தவே கூடாது என்றும் திமுக எம்பி செந்தில்குமார் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்.

முதல்வர் பங்குபெறும் அரசு நிகழ்ச்சிகளில் எவ்வித மத பழக்க வழக்கங்களும் கடைப்பிடிப்பதில்லை. இது கடவுள் மறுப்பு கொள்கை. அனைத்து மதத்தினருக்கும் எல்லோருக்குமான அரசு, முதல்வர் கலந்து கொள்ளாத அரசு நிகழ்ச்சிகளில் மட்டும் மத பூஜை நடத்த ஏற்பாடு செய்கிறது என செந்தில் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம்

தருமபுரி மாவட்டம்

கடந்த ஆகஸ்ட் மாதம் தருமபுரி மாவட்ட ம் ஆலாபுரம் ஏரியிஸல் சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் தருமபுரி எம்பி செந்தில்குமார் பங்கேற்றார். அங்கு இந்து மதம் சார்ந்து மட்டும் சடங்குகள் நடத்தப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அரசு விழாவில் மதச் சம்பிரதாயங்கள் நடத்தக் கூடாது என்றும் தேவைப்பட்டால் மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களையும் அழைத்து மத சடங்குகளை நடத்த வேண்டும் என எம்பி செந்தில்குமார் பேசியிருந்தார்.

 அதியமான்கோட்டை

அதியமான்கோட்டை

அது போல் தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் வளாகத்தில் தமிழக அரசு சார்பில் ரூ 50 லட்சம் மதிப்பில் அதி நவீன நூலகம் கட்டும் பணிக்கான பூமி பூஜை கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இந்த நிகழ்வில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தருமபுரி எம்பி செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

பூமி பூஜை முடிந்த பிறகு பூஜைக்கு வைத்திருந்த கல்லை திமுக எம்பி செந்தில்குார் காலால் தள்ளியதாகவும் இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்களிடம் ஒரு முறை சொல்லலாம், இரு முறை சொல்லலாம், ஒவ்வொரு முறையுமா என எம்பி செந்தில்குமார் கோபமாக பேசிய காட்சிகள் வைரலாகின. தான்அவ்வாறு கற்களை உதைக்கவில்லை என்றும் எம்பி செந்தில்குமார் விளக்கமளித்தார்.

எம்பி செந்தில்குமார்

எம்பி செந்தில்குமார்

இந்த நிலையில் கரூரில் திருமாநிலையூர் ரவுண்டானாவில் செயற்கை நீருற்று மற்றும் எல்இடி மின்விளக்குகளை பொருத்தி அழகுப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பூமிபூஜை நிகழ்ச்சிக்கு செந்தில்பாலாஜியை நேரடியாக கண்டிக்காத எம்பி செந்தில் குமார், கரூர் மாநகராட்சி பார்வைக்கு
இந்தியா ஓர் #மதச்சார்பற்ற_நாடு என்று நமது அரசியல் அமைப்பு சட்டம் உள்ள காரணத்தினால்
கரூர் இந்தியாவில் அமைந்துள்ள ஓர் மாநகராட்சி என்ற அடிப்படையில் அந்த நிகழ்ச்சிக்கு பெயர் #அடிக்கல்_நாட்டு_விழா அல்லது
பணிகள் துவங்கும் விழா என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக ட்வீட்

பாஜக ட்வீட்

இந்த ட்வீட்டிற்கு பாஜக நாராயணன் திருப்பதி வெளியிட்ட ட்வீட்டில் இந்த அறிவுரையை அமைச்சர்
@V_Senthilbalaji அல்லது முதல்வர்
@mkstalin அவர்களிடம் உங்களால் கூற முடியவில்லையே? பயம் தானே? தைரியம், தெம்பு, திராணி இருந்தால் அவர்களிடம் கூறவும் என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+