செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி.. முழு அரசியல் வியாபாரி.. முதல்வர் பழனிசாமி சாடல்
செந்தில் பாலாஜி மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
கரூர்: செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி என்றும், ஒரு அரசியல் வியாபாரி என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடி உள்ளார்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மற்ற கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சியினர் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது முதல்வர் பழனிசாமி உரையாற்றும்போது, சமீபத்தில் கட்சி தாவலில் ஈடுபட்ட செந்தில் பாலாஜியை கடுமையாக தாக்கி பேசினார். முதல்வர் பேசும்போது சொன்னதாவது:

மரியாதை உண்டு
"அமமுக உட்பட பல்வேறு கட்சியிலிருந்து திரும்பவும் அதிமுகவில் இப்படி இணைந்திருப்பது குடும்பத்தின் பாசப்பிணைப்பைதான் காட்டுகிறது. உழைப்பும், நம்பிக்கையும் எங்கிருந்தாலும் அதற்கென்று தனி மரியாதையாக இருக்கும். தொண்டர்களின் இயக்கமாக திகழும் அதிமுகவில் இருப்பவர்களுக்கு என்றுமே ஒரு மரியாதை உண்டு.

5 கட்சிகள்
பச்சோந்தி உயிரினம் அடிக்கடி நிறம் மாறும். அது நேரத்தை பொறுத்து அவ்வாறு மாறும். அப்படித்தான் செந்தில் பாலாஜியும். பச்சோந்தி கூட நிறம் மாற சற்று நேரம் எடுத்துக் கொள்ளும், ஆனால் 5 கட்சிகளில் இருந்துவிட்டு இப்போது தன்னுடைய ஆரம்ப நிலை கட்சிக்கே திரும்பி சென்றுவிட்டார்.

அரசியல் வியாபாரி
அவர் ஒரு அரசியல் வியாபாரி. திமுகவிலிருந்து அதிமுக-வுக்கு வந்தார். வியாபாரத்தைத் தொடங்கினார். இங்கு முடித்துக் கொண்டு அடுத்த இடமான அமமுகவுக்கு போனார். அங்கு வியாபாரம் சரியில்லை. அதனால் இப்போது திமுக-வை நோக்கி சென்றுள்ளார். கொள்கை பிடிப்பு என்பது இல்லை அவருக்கு.

கடவுள் செயல்
முதலில் அதிமுகவை உடைக்க வேண்டும் என திட்டமிட்டார், அதற்காக அமமுக-வில் சேர்ந்து அதற்கான சதித் திட்டங்களை தீட்டினார். ஆனால், அங்கேயும் அவரால் ரொம்ப காலத்துக்கு தொடர முடியவில்லை. இதுதான் கடவுள் செயல்.
-
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications