சீமானுக்கு சட்ட சிக்கல்.. கருணாநிதி பற்றிய அவதூறால் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு.. ஆக.,29ல் விசாரணை
கரூர்: திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் மாஜி முதல்வருமான கருணாநிதி பற்றி சாதி ரீதியாக அவதூறாக பேசியதாக கூறி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 29ம் தேதி நடைபெற உள்ளதால் சீமானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் இருக்கிறார். இவர் தொடர்ந்து திராவிட கட்சிகளை விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுகவையும், அதன் தலைவர்களையும் மேடைக்கு மேடை விமர்சனம் செய்து வருகிறார்.

அதேபோல் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்பட பிற அமைச்சர்களை அவர் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.
சமீபத்தில் கூட விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதி பற்றி நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பாடிய பாடல் சர்ச்சையானது. இதுதொடர்பான புகாரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல பிரிவுகளில் அவரை கைது செய்தனர். அதன்பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அதன்பிறகு இந்த விவகாரம் பற்றி சீமான் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ‛‛புள்ளபூச்சி என்பதால் துரைமுருகனை கைது செய்துவிட்டனர்.புலியையோ சிங்கத்தையோ கைது செய்ய முடியுமா? நான் அந்த பாடலை பாடுகிறேன்.. முடிந்தால் என்னை கைது செய்யட்டும்.. தொட்டுப் பார்க்கட்டும்" எனக்கூறி கருணாநிதி குறித்த சர்ச்சைக்குரிய பாடலையும் அவர் பாடினார்.
இதுதொடர்பாக சீமானுக்கு எதிராக பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் கருணாநிதி குறித்து சாதி ரீதியாக அவதூறு பரப்பியதாக கூறி சீமானுக்கு எதிராக கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை கரூரை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்தார். இதற்கிடையே தான் இந்த மனு வரும் 29 ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சாட்டை துரைமுருகன் கைது விவகாரத்தில் திருச்சி எஸ்பி வருண் குமார் ஐபிஎஸ் சாதி பார்த்து நடவடிக்கை எடுப்பதாக சீமான் குற்றம்சாட்டி இருந்தார். அதன்பிறகு நாம் தமிழர் நிர்வாகிகள் வருண் குமார் எஸ்பியை கடுமையாக விமர்சனம் செய்தனர். அவரது குடும்பத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் வருண் குமார் எஸ்பி புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் சீமானுக்கு எதிரான கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications