கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கரண்ட் கட் இருக்காது மக்களே.. இனி பயப்படத் தேவையில்லை! உறுதியாகச் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி!

Google Oneindia Tamil News

கரூர் : மத்திய அரசின் மின் தொகுப்பிற்கு தமிழக அரசு சார்பில் செலுத்த வேண்டிய 70 கோடி மட்டுமே உள்ளது, அதுவும் ஓரிரு நாட்களுக்குள் அதுவும் செலுத்தப்படும் எனவும், மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் இன்று முதல் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை எனவு, மக்கள் அச்சப்பட தேவையில்லை என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜி போட்ட மெகா பிளான்.. 'எக்ஸ்ட்ரா மார்க்’.. ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!செந்தில் பாலாஜி போட்ட மெகா பிளான்.. 'எக்ஸ்ட்ரா மார்க்’.. ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

மின்வெட்டு அபாயம்

மின்வெட்டு அபாயம்

கரூர் மாநகராசிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் புதிதாக பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வி.செந்தில் பாலாஜி," மத்திய அரசின் போர்டலில் நாம் செலுத்தப்பட வேண்டிய தொகை செலுத்தப்பட்டு விட்டது. ஆனால், அதிகமான தொகை பதிவிட்டு இருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

கணக்கை சரி பார்க்க வேண்டும், அவற்றை சரி செய்ய முடியாது, ஒன்றிய அரசு தான் செய்ய வேண்டும். நாம் செலுத்தப்பட வேண்டியது 70 கோடி ரூபாய் மட்டுமே நிலுவைத் தொகை, நாளை அவற்றை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யார் பில் தொகை கொடுத்தாலும், அவற்றை சரி பார்க்க வேண்டும், ஆனால், அவற்றை சரி செய்யாமல் இருக்கிறார்கள்.

 தவறான கருத்து

தவறான கருத்து

தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் இரு தரப்பு கருத்தை கேட்டு சரி பார்க்கப்பட வலியுறுத்தப்படும். மின்சார கொள்முதல் பொறுத்தவரை மாதாமாதம் 2500 கோடி தேவைப்படும், காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வெளியில் இருந்து கொள்முதல் செய்யாமல் சமாளிக்க முடியும். 03.06.2022 பிறகு மின்சாரம் அந்தந்த மாதத்திற்கு தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. 924 கோடி கொடுக்க வேண்டும் என்பது தவறான கருத்து.

 அச்சம் தேவையில்லை

அச்சம் தேவையில்லை

70 கோடி மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். கொடுத்த தொகை போர்டரில் இருந்து நீக்கப்படாமல் உள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. அதனால் மின்சார தடை ஏற்படும் என்ற அச்சம் கொள்ள தேவையில்லை. நிதிச் சுமையை பொறுத்தவரை கடந்த காலம் போல் இல்லை. 6600 கோடி மட்டுமே கடன் சுமை இருந்தது. சிக்கன நடவடிக்கை மூலம் 2200 கோடி வட்டி சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 1 ஆண்டில் சிறப்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்றார்.

English summary
Tamil Nadu Electricity Minister Senthil Balaji has said that there is no possibility of power cut in Tamil Nadu ; தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X