சீமான் மீது 2 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு.. கருணாநிதி பற்றி அவதூறு பாடல் பாடியதால் கரூர் போலீஸ் அதிரடி
கரூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடியது தொடர்பான புகாரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கரூர் மாவட்டம் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். இவர் பிரசார மேடைகள் மற்றும் பொதுக்கூட்ட மேடைகளில் திமுக கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் சட்டசபை இடைத்தேர்தல் நடந்தது. இந்த பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பாடல் ஒன்றை பாடினார். இது சர்ச்சையை கிளப்பியது.
சாட்டை துரைமுருகன் மீது புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை திருச்சி போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுதலையானார். இதன் தொடர்ச்சியாக சீமான் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி சாட்டை முருகனுக்கு ஆதரவாக பேசினார். அப்போது அவர் பத்திரிகையாளர் சந்திப்பில், கருணாநிதி பற்றி சாட்டை துரைமுருகன் பாடிய அதே பாடலை பாடியதோடு, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று சவால் விட்டார்.
இதையடுத்து சீமான் மீது திமுகவினர் தொடர்ந்து பல போலீஸ் நிலையங்களில் புகாரளித்தனர். அதேபோல் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கரூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் சீமானுக்கு எதிராக புகாரளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சீமான் மீதான புகார் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கடந்த அக்டோபர் 14ம் தேதி உத்தரவிட்டது. இதுதொடர்பாக தாந்தோணிமலை காவல் நிலைய போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் தான் சீமான் மீது தாந்தோணிமலை போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சீமான் மீது மொத்தம் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி இணையதளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நாம் தமிழர் கட்சியினருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications