சயின்ஸ் வாத்தியார் செய்த வேலையை பார்த்தீங்களா.. "டெஸ்ட்" வைத்தாராம்.. ஆபாச பாடம்.. பதறிய மாணவர்கள்
பாலியல் டார்ச்சர் தந்த அறிவியல் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கரூர்: அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்தும்போது ஆபாசமாக பேசியிருக்கிறார்.. இது தொடர்பாக வந்த புகாரையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
நாளுக்கு நாள் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து கொண்டே போகிறது.. வடமாநிலங்களில்தான் இப்படி ஒரு கொடுமைகள் நடந்து வருகிறதென்றால், நம் தமிழ்நாட்டிலும் பரவிவருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.
அதிலும், தொடர்ச்சியாக ஆசிரியர்களே இந்த புகார்களில் சிக்கி வருகிறார்கள்.. பள்ளி, மற்றும் கல்லூரி மாணவிகள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, துணிந்து புகார் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.. மேலும் சில பெண்களோ, மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள்
இந்த புகார்களின் தொடர்பாக அடுத்தடுத்து ஆசிரியர்கள் கைதாகி வருகிறார்கள்.. அது தொடர்பான விசாரணைகளும் நடந்து கொண்டு வருகிறது.. எத்தனை பேர் கைதானாலும், புற்றீசல்போல மீண்டும் இதுபோன்றவர்கள் முளைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. இப்போதும் ஒருவர் சிக்கி உள்ளார்.. கரூரில் அரசு நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியராம். பாகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.. பெயர் பன்னீர்செல்வம்.. 46 வயதாகிறது..

பாடம்
இங்கு ஆண் - பெண் என இருபால் மாணவர்கள் படிக்கிறார்கள்.. இவர் 8ம் கிளாசுக்கு சயின்ஸ் பாடம் நடத்தும்போது, கிளாஸ் ரூமிலேயே ஆபாசமாக பேசுகிறாராம்.. கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி, மாணவர்களின் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பாடம் நடத்துகிறாராம்.. இதையெல்லாம் பொறுத்து பொறுத்து பார்த்த மாணவர்கள் கடைசியில் எழுத்து பூர்வமாகவே புகார் தந்துவிட்டனர்.. இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்தார்..

புகார்
சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று இது சம்பந்தமான நேரடி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.. அதன்படி, மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன் மற்றும் தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் ரமணி ஆகியோர் பள்ளிக்கு சென்று, விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ஒரு குறிப்பிட்ட பாடத்தை நடத்துவதற்காகவே, சில பாடங்களை தவிர்த்துவிட்டு கிளாஸ்ரூமில் பாடம் நடத்தியது தெரியவந்தது..

பாலியல் தொல்லை
அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கு பாலியல் சம்பந்தமான கேள்விகளை கேட்டு ஒரு டெஸ்ட் வைத்தாராம்.. இதுவும் விசாரணையில் தெரியவந்தது... இதெல்லாம் அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சமர்ப்பித்ததையடுத்து, சம்பந்தப்பட்ட சயின்ஸ் டீச்சர் பன்னீர்செல்வத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

டார்ச்சர்
இன்னும் கோவை பிளஸ் 2 மாணவியின் தற்கொலைக்கே விடை கிடைக்கவில்லை.. இதே கரூரில், இன்னொரு மாணவி லெட்டர் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்வில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை... "பாலியல் சீண்டலில் பலியாகும் கடைசி மாணவியாக நானே தான் இருக்கவேண்டும்" என்று அந்த மாணவியின் கண்ணீர் எழுத்துக்களை மறக்க முடியவில்லை.. அதற்குள் இந்த சயின்ஸ் டீச்சர், ஆபாசமாக பாடம் நடத்தி, பிள்ளைகளை டார்ச்சர் செய்துள்ளது மேலும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

என்ன காரணம்?
மாணவர்களுக்கிடையே பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை உளவியல் ரீதியாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழகத்தில் ஏற்கனவே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.. அதேசமயம், "பருவமடைதல்" குறித்த பாடத்தை ஆசிரியர் பன்னீர்செல்வம் வெளிப்படையாக கூறியதால்தான் மாணவர்கள் புகார் கொடுத்துள்ளார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமும் இதில் உள்ளதா? என்று கூடுதல் விசாரணை நடத்தப்படும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications