ராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது.. பொன்.ராதாகிருஷ்ணன் கேலி
கரூர்: ராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட குரும்பபட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட, 'அனைவருக்கும் நல வாழ்வு மையம்' திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார்.

இதில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துதுறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீப காலமாக தொடர்ந்து காவி உடை தரித்தபடி, கோயில்களுக்கு செல்வது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ராகுல்காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது என கிண்டல் செய்து பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கான நேரம் இது இல்லை. தேர்தல் நெருங்கும்போது அதுகுறித்து பேசுவோம். தம்பிதுரை எனது சகோதரர் போன்றவர். மரியாதைக்குரிய லோக்சபா துணை சபாநாயகராக உள்ளார். அவர் கூறும் கருத்து எந்த அர்த்தத்திலானது என்பதை தெரிந்து கொண்டு அதுபற்றி கருத்து கூறுகிறேன். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications