கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியிடம் மண்டியிட்டு கிடப்பதை விட கட்சி மாறுவது எவ்வளவோ மேல்.. முதல்வருக்கு ஜோதிமணி குட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வருக்கு ஜோதிமணி குட்டு-வீடியோ

    கரூர்: மோடியிடம் மண்டியிட்டு அடிமையாக இருக்கும் அரசாங்கம்தான் தமிழக அரசு என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் செல்வி ஜோதிமணி அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பரப்புரையில் பேசினார்.

    அரவக்குறிச்சி சட்டமன்ற திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து கரூர் பரமத்தி ஒன்றியம் அத்திப்பாளையம் மற்றும் நடந்தை ஆகிய ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் கூறுகையில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்தோம் என்பதை மக்களிடம் விளக்கி ஓட்டு கேட்க வேண்டும் அல்லது அடுத்த 5 ஆண்டுகளில் என்ன செய்ய இருக்கிறோம் என்பதைச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்.

    நீல உடையில் வந்த பெண் யார்? ஒரே நாளில் இந்தியா முழுக்க வைரலான தேர்தல் பணியாளர்.. ஏன் தெரியுமா? நீல உடையில் வந்த பெண் யார்? ஒரே நாளில் இந்தியா முழுக்க வைரலான தேர்தல் பணியாளர்.. ஏன் தெரியுமா?

    தேர்தல் அல்ல

    தேர்தல் அல்ல

    மாறாக ஒரு வேட்பாளரை தனிப்பட்ட முறையில் திட்டுவதற்கு தேர்தல் அல்ல. இங்கே தீர்க்கப்படாத பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. அவை குறித்து பேச வேண்டும். பொதுமக்கள் என்னிடம் கூறுவது அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் போது செந்தில் பாலாஜி கட்சி மாறி வந்து வாக்கு சேகரிக்கிறார் என கூறி ஓட்டு கேட்பதாக கேள்விப்படுகிறோம்.

    லேடியா மோடியா கோஷம்

    லேடியா மோடியா கோஷம்

    கட்சி மாறுவது குறித்து பேச அதிமுகவினருக்கு அருகதை இல்லை. காரணம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பிஜேபி தமிழகத்தில் காலூன்ற விடாமல் பார்த்து கொண்டனர். கடந்த தேர்தலில் கூட மோடியா லேடியா என சவால் விட்டவர் ஜெயலலிதா.

    அடிமை அரசாங்கம்

    அடிமை அரசாங்கம்

    தமிழகத்தின் நலனுக்கு எதிராக ஜிஎஸ்டி , நீட் தேர்வு , ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றை ஓபிஎஸ்- எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் மோடியுடன் சேர்ந்து அனுமதித்து விட்டனர்.

    மோடியிடம் மண்டியிட்டு அடிமையாக இருக்கும் அரசாங்கம்தான் இந்த தமிழக அரசு.

    செந்தில் பாலாஜி

    செந்தில் பாலாஜி

    ஏற்கெனவே 10 பேர் அவர்களுடன் அடிமையாக இருக்கும்போது 11 வது நபராக செந்தில் பாலாஜி இருக்க முடியாது என்பதற்காக கட்சி மாறி இருக்கிறார். இன்று 43 வயதில் 23 வருட அரசியல் அனுபவம் உள்ள இளைஞர் செந்தில் பாலாஜி தான்.

    பிரச்சினை

    பிரச்சினை

    தொடர்ந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுகவில் இணைந்து தேர்தலில் களம் காண்கிறார். கட்சி மாறுவது குறித்து பேசுவது மக்கள் பிரச்சினை அல்ல. பொதுமக்களின் பிரச்சினையே இங்கே பேசப்படவேண்டும்.

    குறைந்தபட்சம்

    குறைந்தபட்சம்

    2004-இல் கிராமப்புற ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உறுதி செய்வோம் என்று கூறி காங்கிரஸ் அரசு 100 நாள் வேலை திட்டத்தை அறிவித்து கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தபட்ச வருவாய் கிடைக்க வழி வகை செய்துள்ளது.

    வறுமை ஒழிக்கப்படும்

    வறுமை ஒழிக்கப்படும்

    விவசாயிகளுக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். குறைந்தபட்சம் ஆறாயிரம் மாத வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். கிராமப்புறங்களில் உள்ள வறுமை இன்றுவரை ஒழிக்கப்படாமல் உள்ளது. இதனால் அது மாற்றப்படும் என தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பேசினார்.

    English summary
    Congress Spokesperson Jothimani says that Senthil Balaji has 23 years of political experience in 43 years of his age.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X