ஜோதிமணியை கடித்த "கை".. மேலிடம் பறந்த "ரகசியம்".. துப்பு கிடைச்சிடுச்சாமே.. அப்ப கச்சேரி இருக்கு
ஜோதிமணி எம்பி கரூர் தொகுதிக்குள் திடீர் விசிட் அடித்ததற்கு காரணம் என்ன
கரூர்: ஜோதிமணி குறித்த ஒரு முக்கிய தகவல் காங்கிரஸ் கட்சிக்குள் வட்டமடிக்கிறது.. இதனால் கரூர் மாவட்ட அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
கரூர் தொகுதி எம்பி ஜோதிமணியை பொறுத்தவரை எளிமையானவர்.. சுறுசுறுப்புக்கு பெயர் போனவர்.. முக்கியமாக ராகுல்காந்தியின் நம்பிக்கைக்கு உரியவர்.. காங்கிரஸ் மேலிடத்தின் நெருக்கமானவராகவும் அறியப்படுபவர்.
தன்னுடைய அதிரடி செயல்பாடுகளால் மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்.. அதனால்தான், காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டம் வரை அசால்ட்டாக செல்வாக்கை பெற்றள்ளார்.

லடாய்
சமீபகாலமாகவே இவர்மீது ஒரு கருத்து பதியப்பட்டு வருகிறது.. அதாவது எம்பி-யாகும் வரை கரூர் அரசியலில் அதிக கவனத்தை செலுத்தி வந்தவர், தற்போது, மேல்மட்ட அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.. போதாக்குறைக்கு செந்தில் பாலாஜியுடன் லேசான உரசல் ஏற்படவும், கரூர் அரசியலில் இருந்து, லைட்டாக விலகியே இருக்கிறார்... இதுபோக, மாவட்ட கலெக்டருடனும் அதிருப்தி வந்துவிட்டதால், தொகுதிக்குள் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளையும் ஜோதிமணி புறக்கணித்து விடுவதாக கூறப்படுகிறது.

ஜே ஜே ஜோதிமணி
ஆனால், தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.. குறிப்பாக, ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டதில் இருந்தே, அந்த பயணங்களில் பங்கேற்று உறுதுணையாக இருக்கிறார்.. தென் மாநிலங்களில் ராகுலின் நடைபயணத்தில் ஜோதிமணியின் பங்கு மிக முக்கியமானது என்றே சொல்லலாம்.. தற்போதும் யாத்திரையில் கலந்து கொண்டபடியே உள்ளதால், கரூரில் முன்புபோல் இவரை பார்க்க முடிவதில்லை.. ஏற்கனவே ஜோதிமணி மீது பொருமலிலும், பொறாமையிலும் இருந்த சிலர், இந்த விஷயத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர்.

முருங்கை எக்ஸிபிஷன்
அதன்படி ஒருசிலரை உசுப்பேற்றிவிட்டு, "கரூர் எம்பி-யை காணவில்லை" என்று போஸ்டர்களை கரூர் முழுக்க ஒட்டி பரபரப்பை கிளப்பிவிட்டனர்.. சோஷியல் மீடியாவிலும் வைரலாக்கினர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், திடீரென கரூருக்குள் என்ட்ரி தந்தார் ஜோதிமணி.. சர்வதேச முருங்கை கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.. ஜோதிமணியை தொகுதிக்குள் பார்த்ததும் பலரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.. அதேசமயம், யாத்திரையை வழி நடத்தும் பொறுப்பாளர்கள் பதறிப்போய்விட்டார்களாம்.

துப்பு
யாத்திரையில் பங்காற்றி வந்தவர், திடீரென கரூருக்கு கிளம்பி சென்றுவிட்டாரே? என்ன காரணமாக இருக்கும்? என்று நினைத்து, ஜோதிமணியிடமே கேட்டுவிட்டார்களாம்.. அதற்கு ஜோதிமணி, "நான் காணாமல் போயிட்டேனாம்.. யாத்திரையில் தொடர்ந்து பங்கேற்பதை பிடிக்காத யாரோ, இப்படி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளதால்தான், கரூருக்கு போனேன்.. சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றேன்" என்றாராம்.. இப்போது மறுபடியும் ஜோதிமணி, ராகுலின் யாத்திரையில் பங்கேற்றாலும், யார் இந்த வேண்டாத வேலையை செய்தது என்று தொகுதிக்குள் ரகசியமாக விசாரித்தாராம். யாத்திரையில் பங்காற்றி வந்தவர், திடீரென கரூருக்கு கிளம்பி சென்றுவிட்டாரே? என்ன காரணமாக இருக்கும்? என்று நினைத்து, ஜோதிமணியிடமே கேட்டுவிட்டார்களாம்.. அதற்கு ஜோதிமணி, "நான் காணாமல் போயிட்டேனாம்.. யாத்திரையில் தொடர்ந்து பங்கேற்பதை பிடிக்காத யாரோ, இப்படி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளதால்தான், கரூருக்கு போனேன்.. சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றான்" என்றாராம்.. இப்போது மறுபடியும் ஜோதிமணி, ராகுலின் யாத்திரையில் பங்கேற்றாலும், யார் இந்த வேண்டாத வேலையை செய்தது என்று தொகுதிக்குள் ரகசியமாக விசாரித்தாராம்.

ஸ்டிரிக்ட்
அப்போதுதான் சொந்த கட்சியின் "கை"யே கடித்துவிட்டதாகவும், ராகுலுக்கு நெருக்கமான வட்டத்துக்குள் சென்றதால் அவர்களுக்கு பிடிக்காததால் இப்படி கிளப்பி விட்டதாகவும் துப்பு தந்தார்களாம் நம்பக்கைவாசிகள்.. இதைக்கேட்ட ஜோதிமணி, இதையும் மேலிடத்துக்கு கொண்டு செல்கிறேன் என்று ஸ்ட்டிரிக்கட்டாக சொல்லிவிட்டு கிளம்பினாராம்.. அப்படின்னா கூடிய சீக்கிரம், கரூரில் கச்சேரி இருக்கு போல..!!
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications