கரூர் நாடாளுமன்றத் தொகுதியை சுற்றி சுற்றி வரும் ஜோதிமணி! தொகுதிப் பங்கீட்டில் திமுகவின் முடிவு?
கரூர்: கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திட்டத்தில் உள்ள ஜோதிமணி எம்.பி., இப்போது தொகுதி முழுவதும் சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்துள்ளார்.
இன்று கூட மணப்பாறை ஒன்றியத்துக்குட்பட்ட பல ஊர்களுக்கு ஜோதிமணி டூர் செல்கிறார். கடந்த நான்கரை ஆண்டுகளில் இல்லாத வகையில் இப்போது தொகுதி முழுவதும் வலம் வருவதன் பின்னணியில் மீண்டும் கரூர் தொகுதியில் களமிறங்குவதில் ஜோதிமணி உறுதியாக உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், ஜோதிமணி எம்.பி.க்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வரும் சூழலில் கரூர் மக்களவைத் தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு திமுக ஒதுக்குமா என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் ஜோதிமணியை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக தர்ணா, உள்ளாட்சித் தேர்தல் சீட் பங்கீட்டின் போது உள்ளூர் திமுக நிர்வாகிகளுடன் மோதல் என கடந்த காலங்களில் லோக்கல் பாலிடிக்ஸ் காரணமாக பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
இதனால் தொகுதிப் பங்கீட்டில் கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதும் ஒதுக்காததும் திமுக தலைமை எடுக்கும் முடிவில் தான் உள்ளது. இதனிடையே காங்கிரஸ் மேலிட வட்டாரத்தில் ஜோதிமணிக்கு மிகுந்த செல்வாக்கு இருப்பதால், கரூர் தொகுதியில் மீண்டும் அவர் களமிறங்குவதில் சிக்கல் இருக்காது என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் ஜோதிமணி ஆதரவாளர்கள்.

ஜோதிமணி மீண்டும் கரூரில் போட்டியிட்டால் அவரை தேர்தலில் வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுக்கும் பணிகளில் அதிமுக தீவிரமாக உள்ளது. விராலிமலை சட்டமன்றத் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதிக்குள் வருவதால் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன், சி.விஜயபாஸ்கரும் இணைந்து காங்கிரஸை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் போல் தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications