பாட்டி இடுப்பை ஜோதிமணி பிடிக்க.. ஜோதிமணி தோளில் பாட்டி கை போட.. ஒரே பாசம்தான்!
அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜிக்காக ஜோதிமணி பிரச்சாரம் செய்தார்.
சென்னை: பாட்டியை ஜோதிமணி கட்டிப்பிடிக்க.. ஜோதிமணி தோளின் மீது பாட்டி கை போட்டு பேச.. என தொகுதிக்குள் பாசம் பெருக்கெடுத்து ஓடுகிறது!
கரூர் தொகுதியில் ஜோதிமணி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அப்போது எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் தம்பிதுரையாக இருந்தாலும், அவரிடம் ஏற்கனவே 2 முறை தோற்றுவிட்டோம் என்று தெரிந்தும்.. தொகுதிக்குள் வளைத்து வளைத்து வாக்கு சேகரித்தார்.

அந்த சமயத்தில் ஜோதிமணியை அதிகம் கவர்ந்தது குழந்தைகளும், பாட்டிகளும்தான்! போகும் இடமெல்லாம் ஒரு குழந்தையை ஜோதிமணி இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்வார். முடிந்தால் குழந்தைக்கு பெயரும் வைப்பார்.. அதுவும் பிரியங்கா என்ற பெயர் மட்டும்தான் வைப்பார்!
இப்போது அரவக்குறிச்சியில் திமுக சார்பாக செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். அதனால் அண்ணன் செந்தில்பாலாஜி வெற்றி பெற வேண்டும் என்று அவருக்காக தங்கை ஜோதிமணியும் பிரச்சாரம் செய்கிறார். அந்த வகையில் கிராமங்களுக்கு செல்லும் இடங்களில் வழக்கம்போல் பாட்டிகளுக்கு ஜோதிமணியை அதிகம் பிடித்துவிட்டது!
The moment of unconditional love ❤️❤️#Aravakurichibypoll pic.twitter.com/avlqqzlj2m
— Jothimani (@jothims) April 28, 2019
அதனால் ஜோதிமணியை பார்த்ததும் இறுக்கமாக கட்டிப் பிடித்து கொள்கிறார்கள். ஒரு பாட்டி ஜோதிமணி கையை கெட்டியாக பிடித்து கொள்கிறார் என்றால், இன்னொரு பாட்டி அவரது தோளிலேயே கை போட்டு கொண்டு பேசுகிறார்.
அந்த பாட்டிக்கு பின்னால் இன்னொரு பாட்டி, ஜோதிமணியை கட்டிப்பிடிக்க வெயிட்டிங்கில் நிற்கிறார். ஜோதிமணி மட்டும் சும்மாவா என்ன.. பாட்டி தோள் மீது என்றால், ஜோதிமணி பாட்டியின் இடுப்பை பிடித்து கொள்கிறார்.. என ஒரே லவ்வுதான்!












Click it and Unblock the Notifications