கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமலை குறிவைத்து எறியப்பட்ட முட்டை, கற்கள்.. கொதித்த மநீம.. அரவக்குறிச்சியில் நடந்தது என்ன?

நேற்று அரவக்குறிச்சியில் பிரச்சார கூட்டத்தில் கமல்ஹாசன் பேசிவிட்டு திரும்பும் போது அவரை நோக்கி முட்டை மற்றும் கற்கள் வீசப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அவரக்குறிச்சி கமல்ஹாசன் பிரச்சாரத்தில் உண்மையில் நடந்தது இது தான்- வீடியோ

    கரூர்: நேற்று அரவக்குறிச்சியில் பிரச்சார கூட்டத்தில் கமல்ஹாசன் பேசிவிட்டு திரும்பும் போது அவரை நோக்கி முட்டை மற்றும் கற்கள் வீசப்பட்டு இருக்கிறது.

    சில நாட்களுக்கு முன் அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பேசினார். அங்கு அவர் இந்து தீவிரவாதி குறித்து பேசியது பெரிய வைரலானது.

    கமல்ஹாசன் தனது பேச்சில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே, என்று குறிப்பிட்டார். கமல்ஹாசனின் பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா ஆகிய இந்து அமைப்புகள் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து நேற்று மீண்டும் அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்திற்கு போலீஸ் அனுமதி வழங்கியதை அடுத்த மிகுந்த பாதுகாப்போடு பிரச்சாரம் நடந்தது.

    இதுதான் திட்டம்.. ஸ்டாலினின் பிளான்படி நடக்கும் எதிர்க்கட்சிகள்.. தேசிய அளவில் கவனம் பெறும் திமுக! இதுதான் திட்டம்.. ஸ்டாலினின் பிளான்படி நடக்கும் எதிர்க்கட்சிகள்.. தேசிய அளவில் கவனம் பெறும் திமுக!

    எங்கு நடந்தது

    எங்கு நடந்தது

    அரவக்குறச்சி வேலாயுதம் பாளையத்தில் இந்த பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் 45 நிமிடங்கள் பேசினார். அதில் கோட்சே குறித்து பேசியதற்கு கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். தான் பேசியது வரலாற்று உண்மைதான் என்று மீண்டும் அரவக்குறச்சியில் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

    தள்ளுமுள்ளு

    தள்ளுமுள்ளு

    கமல்ஹாசன் தனது பேச்சை முடிக்கும் 5 நிமிடத்திற்கு முன் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்து ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபா அமைப்பை சேர்ந்த சிலருக்கும், மநீம தொண்டர்களுக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் கமல்ஹாசன் விரைவாக தனது பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட முயன்றார்.

    கல் வீசினார்கள்

    கல் வீசினார்கள்

    ஆனால் அவர் மேடையை விட்டு இறங்கும் போது அவரை நோக்கி சிலர் கற்கள் மற்றும் முட்டைகளை வீசினார்கள். சிலர் காலணிகளை வீசினார்கள். ஆனால் கமல்ஹாசன் மீது எதுவும் படவில்லை. இதில் இருந்து தப்பித்து கமல்ஹாசன் பாதுகாவலர்கள் உதவியுடன் தனது காருக்குள் சென்றார்.

    கடுமையான மோதல்

    கடுமையான மோதல்

    இதையடுத்து மநீம மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினருக்கு இடையில் அங்கு மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டனர். கற்களை வீசிய நபர்களை காவல் துறையினா் அழைத்துச் சென்றனா். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    ஏற்கனவே வேலாயுதம்பாளையத்தில் போராட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்தவா்கள் அனுமதி கோாியிருந்தனா். ஆனால் போலீஸ் அதை அனுமதிக்கவில்லை. கமல்ஹாசன் மீது கற்கள் வீசப்பட்டதை எதிர்த்து சினேகன் உள்ளிட்ட மநீம உறுப்பினர்கள் சம்பவ இடத்தில் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    English summary
    Kamal Haasan's remark on Hindu Terrorism: What actually happened in yesterday's Aravakurichi rally?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X