கரூரில் கணவன், மனைவி மீது அப்படியே கான்கிரீட் கலவையை ஊத்திய ஒப்பந்ததாரர்.. ஷாக் சம்பவம்
கரூர்: கரூரில் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது ஒப்பந்ததாரர் கான்கிரீட் கலவையைக் கொட்டிய செயலால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சி 16-வது வார்டுக்கு உட்பட்ட ஜெஜெ நகர் குடியிருப்புப் பகுதி இருக்கிறது. இங்கு சாக்கடை கட்டுமானப் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஜெஜெ நகர் குடியிருப்பு பகுதியில் கோமதி என்பவரின் வீட்டை ஒட்டி சாக்கடை கட்ட பள்ளம் தோண்டி இருக்கிறார்கள்.

இதனால் அந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவர் விரிசல் விட்டுள்ளது. இதனால் அவர்கள் ஒப்பந்ததாரரிடமும், நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அந்த வீட்டின் படுக்கை அறை சமையல் அறை, ஹால் உள்ளிட்ட இடங்களில் இரும்பு ஜாக்கியை கொண்டு முட்டு கொடுத்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சாக்கடைக்கும், அவர்களது பக்கவாட்டு சுவருக்கும் உள்ள இடைவெளியில் காங்கிரிட் போட வேண்டும் என்றால் 43 ஆயிரம் கொடுத்தால் தான் போடுவோம் என ஒப்பந்ததாரர் வீட்டின் உரிமையாளரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேலையை கிடப்பில் போட்டு விட்டுச் சென்ற நிலையில், அப்பகுதி பொதுமக்கள் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்றும், பணிகளை முடிக்காததால் வீடுகளுக்குச் செல்லவும், வீட்டு கழிவு நீர் வெளியேற வழி இல்லாமல் இருப்பதாக குற்றம் சாட்டினர்.
இதையடுத்து அங்கு வந்த கவுன்சிலர் பூபதி மற்றும் மாநகராட்சி பொறியாளர் ரவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்படி ஒப்பந்ததாரை அந்த வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டதை அடுத்து பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று கான்கிரீட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது. பாதிக்கப்பட்டவர் வீட்டின் முன்பு பணம் கொடுக்காமல் காங்கிரிட் அமைக்க முடியாது என்று ஒப்பந்ததாரர் கூறியிருக்கிறார். இடிந்த வீட்டின் சுவரை கட்ட தம்பதியிடம் ரூ.43,000 நிதி கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டின் உரிமையாளர்களான பாலச்சந்தர் மற்றும் கோமதி தம்பதிகள் இருவரும் கழிவுநீர் வடிகால் குழியில் இறங்கி போராடினார்கள்.
அதனை பொருட்படுத்தாமல் கோபத்தில் ஒப்பந்ததாரர் அவர்கள் மீது கான்கிரீட் சிமெண்ட் கலவையை கொட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை ஆனது.இதனிடையே கரூரில் கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது ஒப்பந்ததாரர் கான்கிரீட் கலவையைக் கொட்டும் வீடியோ வெளியானதால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications