கரூர் திமுக கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜோதிமணி.. 'விருந்துக்கா வந்திருக்கேன்..''என ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக-வினர் தன்னை வெளியேற சொன்னதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் மும்முரமாக நடக்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடந்தது.

 கூட்டணி

கூட்டணி

மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளரை இறுதி செய்வதற்கு வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் கலந்து கொள்ளாமல் அவர்களாகவே தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமணி திமுகவினரிடம் முறையிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

 ஜோதிமணி

ஜோதிமணி

கூட்டத்தில் இருந்து தொடர்ந்து வெளியேறிய ஜோதிமணி பேச்சுவார்த்தையின்போது, திமுகவினர் வெளியேற சொன்னதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு வந்த கூட்டணி கட்சியினரை வெளியே போகச் சொன்னது கூட்டணி தர்மமா என்று ஜோதிமணி ஆவேசத்துடன் கூறிவிட்டு வெளியேறியுள்ளார். அப்போது, ''உங்க ஆபீசுக்கு நான் வந்துருக்கேன், என்னை எப்படி வெளியே போன்னு சொல்லுவீங்க.. உங்க வீட்டுக்கா வந்துருக்கேன். என்னை எப்படி வெளியே போன்னு சொல்லுவாங்க. நீங்க தான கூப்டீங்க..கூட்டணி பேச்சு வார்த்தைக்கு தான வந்திருக்கேன். நான் என்ன விருந்துக்கா வந்திருக்கேன். வெளியே போக சொல்ல இவங்க யாரு..இதான் கூட்டணி தர்மமா'' என்று அங்கிருந்தவர்களைக் கேள்விக் கேட்டுக்கொண்டே அங்கிருந்து வெளியேறினார் கரூர் எம்.பி ஜோதிமணி.

 கருத்து மோதல்

கருத்து மோதல்

ஏற்கெனவே கரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முறையாக திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று கரூர் மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார் ஜோதிமணி.

செந்தில் பாலாஜி பங்கேற்ற கூட்டம்

செந்தில் பாலாஜி பங்கேற்ற கூட்டம்

இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்ற கூட்டத்தில் இருந்து ஜோதிமணி வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் எம்பி ஜோதிமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+