செந்தில் பாலாஜி போட்ட விதை.. கேப்சூலாக வெளிநாடு பறக்கும் கரூர் ‘முருங்கை’.. விவசாயிகள் செம ஹேப்பி!
கரூர்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் கரூர் மாவட்ட முருங்கை விவசாயிகள் வாழ்வில் ஒளி ஏற்றப்பட உள்ளது. முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. கடந்த 2022ல் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னின்று நடத்திய முருங்கை கண்காட்சி மூலம் இன்றைய முதலீட்டுக்கு விதை போடப்பட்டதாக கூறுகின்றனர் கரூர் மாவட்ட மக்கள்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொடி முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை, மூலனூர் முருங்கை என பல்வேறு வகை முருங்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விதை விதைத்தும், முருங்கைக் கன்று நட்டு வைத்தும் முருங்கை உற்பத்தி கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள், முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு முருங்கை சாகுபடியே வாழ்வாதாரமாக விளங்குகிறது. கரூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் முருங்கைக் கீரை, முருங்கைக்காய், முருங்கைப் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முருங்கைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் சீசன்களில் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, கரூர் முருங்கை விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து முருங்கை இலையை பதப்படுத்தி கேப்சூல் வடிவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று கையெழுத்தாகியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கரூரில் சர்வதேச முருங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த கண்காட்சி நடைபெறுவதற்கு காரணமாக இருந்தார். அவரே, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு அழுத்தம் கொடுத்து கரூரில் முருங்கை கண்காட்சி நடைபெறச் செய்தார்.
இந்த முருங்கை கண்காட்சியில் நூற்றுக்கணக்கான முருங்கை விவசாயிகளும், பிரேசில், ஜெபர் கஸ்பர், ஜப்பான், கொரியா, ஸ்ரீலங்கா, மலேசியா, துபாய், லெபானன், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சியின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோரிக்கையின்படி கரூரில் முருங்கை பார்க் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக கரூர் மாவட்ட முருங்கை விவசாயிகள் பயன்பெற உள்ளனர். இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு முருங்கை விவசாயிகளுக்கான மாநாடு, கருத்தரங்கம், கண்காட்சி நடத்திய செந்தில் பாலாஜி தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில், அவருக்கும், தமிழக அரசுக்கும், தொழில் துறைக்கும் கரூர் மாவட்ட முருங்கை விவசாயிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications