Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அண்ணே, உங்களை தெரியும்" கரூரில் கதறிய செய்தியாளர்! திமுக பழனியாண்டிக்கு சிக்கல்? சீறும் கிருஷ்ணசாமி

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் குவாரியில் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.. இன்றும்கூட, திருச்சி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான திமுக எம்எல்ஏ பழனியாண்டியை கைது செய்ய வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கொந்தளித்து கூறியிருக்கிறார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரியில், சமீபத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் டிவி செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் உள்ளிட்ட 5 பேர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.

DMK MLA Palaniyandi

சம்பவ இடத்திற்கு வந்த எம்.எல்.ஏ பழனியாண்டி முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், ஒளிப்பதிவு உபகரணங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கரூர் குவாரி

"அண்ணே, உங்களை எனக்கு நல்லாத் தெரியும்" என்று செய்தியாளர் கதறும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த வழக்கறிஞர் திருமலை ராஜன் உள்ளிட்ட 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளர்கள் மீதான இத்தாக்குதலுக்குச் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

திமுக எம்எல்ஏ பழனியாண்டி

இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.. அந்தவகையில், பாஜக அண்ணாமலை கூறும்போது, திமுக எம்எல்ஏ பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கனிம சுரண்டலை கேள்வி கேட்டதற்காக, ஊடகவியலாளர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த ரவுடிகள், முழுக்க முழுக்க திமுகவின் பாதுகாப்பிலேயே செயல்படுகிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா? என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்..

புதிய தமிழகம் கட்சி தலைவர்

இந்நிலையில், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்...

இதுகுறித்து கிருஷ்ணசாமி, "கரூர் மாவட்டம், குளித்தலை அய்யர்மலை பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சியின் திருச்சி மாவட்ட செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபஸ்டின் ஆகியோர் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை புதிய தமிழகம் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஊடகவியலாளர்கள், மக்கள் நலன் கருதி சமூக ஆர்வலர்களுடன் இணைந்து செய்தி சேகரிக்க முற்பட்டபோது, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, அவரது மகன், சகோதரர்கள் மற்றும் சுமார் 20-க்கும் மேற்பட்ட அடியாட்கள் செய்தியாளர்களை மிகக் கொச்சையான வார்த்தைகளால் திட்டி, கொலை வெறித் தாக்குதலை நடத்தியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது..

எம்எல்ஏவை கைது செய்ய வேண்டும்

தங்களது சட்டவிரோத செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சத்தில், சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அதிநவீன கேமராக்கள் மற்றும் ட்ரோன் உபகரணங்களை அடித்து நொறுக்கியதோடு, இனிமேல் இந்தப் பக்கம் வந்தால் கொன்று புதைத்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அதிகாரப் பலத்தை வைத்துக்கொண்டு, கனிமவளங்களை சூறையாடுவது மட்டுமின்றி, அதனைத் தட்டிக்கேட்கும் ஊடகவியலாளர்கள் மீதே கை வைப்பது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.

எனவே, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடைபெற காரணமாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்குதலில் சேதமடைந்த ஊடக உபகரணங்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு பெற்றுத்தர வேண்டும்" என்று டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில் கரூரில் இப்படியெல்லாம், ஆர்ப்பாட்டங்களும், கண்டனங்களும், போராட்டங்களும் வெடித்து வருவது, கரூர் திமுகவுக்குள் சலசலப்பை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+