கரூரில் வட்டமடித்த "ஒத்த ரோசா".. எப்ப பார்த்தாலும் கோவையையே சுற்றி வந்தாராம்.. கதி கலங்கிப்போன கணவன்
கரூர்: கரூர் மாவட்டத்தையே அதிர வைத்துள்ளார் 25 வயதான கிருத்திகா.. யார் இவர்? என்ன நடந்தது?
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ளது எலவனூர் கதர்மங்கலம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் செல்வக்குமார்.. இவருக்கு 27 வயதாகிறது.. இவரது மனைவிதான் கிருத்திகா.. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா..

கடந்த 2020-ல் இவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது.. செல்வக்குமார் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில், தன்னுடைய குடும்பத்துடன் தங்கி, நிதி நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்தார்.
என்ன காரணம்: இந்தநிலையில் கிருத்திகா அடிக்கடி அம்மா பாலாமணியை பார்ப்பதற்காக அடிக்கடி கோவைக்கு வந்துவிடுவாராம். எந்நேரமும் கோவைக்கு செல்வதால், இதுகுறித்து செல்வக்குமார் கிருத்திகாவை கேட்டிருக்கிறார். அதற்கு கிருத்திகா, தன்னுடைய அம்மாவை பார்க்காமல், தன்னால் இருக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்.
ஒருகட்டத்தில் தம்பதிக்குள் இதுகுறித்து தகராறும் வெடித்துவிட்டது.. இப்படித்தான் கடந்த 2023-ம் ஆண்டு தன்னுடைய அம்மாவை பார்ப்பதாக சொல்லிவிட்டு, நேராக கதர்மங்கலத்தில் உள்ள செல்வக்குமார் வீட்டிற்கு கிருத்திகா சென்றிருக்கிறார்.. அங்கு வீட்டிலில் பீரோவிலிருந்த நகை-பணத்தை கிருத்திகா எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாராம். இதுபற்றி செல்வக்குமாருக்கு தெரியவந்தது, கிருத்திகாவுக்கு போன் செய்துள்ளார்.. ஆனால், கிருத்திகா போனை எடுக்கவேயில்லையாம்.
கிருத்திகா: இதனால் சந்தேகமடைந்த செல்வக்குமார், கோவையிலுள்ள கிருத்திகாவின் வீட்டுக்கே நேரடியாக சென்று பார்த்தார்... அப்போது, வீட்டை காலி செய்துவிட்டு, கிருத்திகா சென்று விட்டதாக அங்கிருந்தவர்கள் சொல்லி உள்ளனர். அதற்கு பிறகு, கிருத்திகாவின் உறவினர்களை எல்லாம் நேரடியாகவே சந்தித்து கிருத்திகா குறித்து விசாரித்தார்.
அப்போதுதான், கிருத்திகாவிற்கு ஏற்கனவே கல்யாணமான விஷயமே தெரியவந்துள்ளது.. அதுமட்டுமல்ல, முதல் கணவரிடம் விவாகரத்து பெறாமலேயே, தன்னுடன் குடும்பம் நடத்தி வந்ததையும், செஞ்சேரிமலை பகுதியில் தற்போது கிருத்திகா தலைமறைவாக வசித்து வருவதையும் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தார் செல்வக்குமார். இதையடுத்து, செல்வக்குமார் செஞ்சேரிமலைக்கு சென்று, கிருத்திகாவை சந்தித்து, திருமணத்தின்போது தந்த தங்க நகை மற்றும் பணம் போன்றவற்றை கேட்டிருக்கிறார்.
நகை, பணம்: அதற்கு கிருத்தி, நகை, பணத்தை திருப்பி கேட்டால், தன்னை டார்ச்சர் செய்வதாக சொல்லி, போலீசில் புகார் தருவேன் என்று மிரட்டியிருக்கறார்.. அத்துடன், செல்வக்குமாரிடம் கூடுதலாக பணம் பறிக்கும் நோக்கில், பல்லடம் சார்பு நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு வழக்கும் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பிறகு, அரவக்குறிச்சி கோர்ட்டில் செல்வக்குமார், மற்றொரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கிருத்திகா தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து, விவாகரத்து பெறாமலேயே என்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டு, எனது நகை, பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தார்.
பரபரப்பு: இந்த வழக்கு விசாரணை இத்தனை காலமும் நடந்து வந்தநிலையில், கிருத்திகா தற்போது கைதாகி உள்ளார்.. அரவக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அவரை போலீசார் ஜெயிலில் அடைத்துள்ளனர்.. கரூரில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications