கரூர்: கரையேறப் போராடும் காங்கிரஸ் ஜோதிமணி! மீண்டும் வாகை சூடும் முனைப்பில் அதிமுக தங்கவேல்!
கரூர்: வினோதமான உட்கட்சி அரசியல் பஞ்சாயத்துகளை எதிர்கொண்ட கரூர் லோக்சபா தொகுதியில் மீண்டும் வெல்ல காங்கிரஸின் ஜோதிமணி போராடுகிறார். காங்கிரஸை வீழ்த்தி மீண்டும் வாகை சூட காத்திருக்கிறது அதிமுக.
கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: வேடசந்தூர்,
அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மணப்பாறை, விராலிமலை. திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களின் சட்டசபை தொகுதிகளைக் கொண்டது கரூர்.

கரூர் லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 14,21,494; ஆண்கள்-6,89,900; பெண்கள்- 7,31,502; 3-ம் பாலினத்தவர்- 92.
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
தம்பிதுரை(அதிமுக) 3,80,542
கே. சி. பழனிசாமி(திமுக) 3,33,288
ஆர். இராமநாதன்(தேமுதிக) 51,196
ஆர். நடராசன்(கொமுபே) 14,269
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
மு. தம்பிதுரை(அதிமுக) 5,40,722
சின்னசாமி(திமுக) 3,45,475
என். எஸ். கிருஷ்ணன்(தேமுதிக) 76,560
ஜோதிமணி(காங்கிரஸ்) 30,459
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ஜோதிமணி (காங்கிரஸ்) 6,95,697
தம்பிதுரை(அதிமுக) 2,75,151
கருப்பையா(நாம் தமிழர் கட்சி) 38,543
தங்கவேலு(அமமுக) 31,139
2024-ம் ஆண்டு களத்தில்..
ஜோதிமணி (காங்கிரஸ்)
தங்கவேல் (அதிமுக)
செந்தில்நாதன் (பாஜக)
கருப்பையா (நாம் தமிழர் கட்சி)
கரூர் தொகுதி நிலவரம் எப்படி உள்ளது?: 4 மாவட்டங்களில் விரிந்து பரந்து கிடக்கும் தொகுதி. திமுகவும் அதிமுகவும் வலுவான வாக்கு வங்கியை வைத்திருக்கிறது. காங்கிரஸுக்கு சற்று குறைவான வாக்கு வங்கி இருக்கிறது. திமுகவின் தயவில்தான் காங்கிரஸ் இத்தொகுதியில் இருக்கிறது. கரூரில் ஜவுளி தொழில் பிரதானம். கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு தரவே கூடாது என திமுகவினர் போர்க்கொடி தூக்கினர். காங்கிரஸ் கட்சியில், கரூர் தொகுதியில் ஜோதிமணியை மீண்டும் வேட்பாளராக அறிவிக்கவே கூடாது என கலகக் குரல் எழுப்பினர். திமுகவின் செல்வாக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தாக்குப் பிடித்து பிரசாரம் செய்து வருகிறார். அதிமுகவே தமக்கான வாக்கு பலத்தை முழுமையாக நம்பி முழு அளவில் பிரசாரம் செய்து வருகிறது. பாஜகவும் ஏதோ ஒரு நம்பிக்கையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் சொந்த தொகுதி என்பதால் களத்தில் இருக்கிறது. கடந்த முறையைவிட இம்முறை கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டும் என களத்தில் நிற்கிறார் நாம் தமிழர் கருப்பையா.












Click it and Unblock the Notifications