போர்டு வைக்க முடியாது! கரூர் மேயர் கவிதா காரசார வாக்குவாதம்! கேலிக்கூத்தாகும் மாநகராட்சி கூட்டம்!
கரூர்: மாநகராட்சிக் கூட்டத்தையே கேலிக்கூத்தாக்கும் வகையிலும் அதன் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும் கரூர் மாமன்றக் கூட்டத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
போர்டு வைப்பது தொடர்பாக அதிமுக கவுன்சிலர்கள் இருவர் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு மேயர் என்கிற முறையில் கவிதா கணேசன் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆர்வகோளாறில் திமுக கவுன்சிலர் ஒருவர் அதிமுக கவுன்சிலர்களை அடிக்கப் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாமன்றக் கூட்டத்தில் மேயர் கண் முன்னாலேயே எதிர்க்கட்சி கவுன்சிலர்களை ஆளுங்கட்சி கவுன்சிலர் அடிக்க பாய்கிறார், அதனை தடுத்து நிறுத்த வேண்டிய மேயர் கவிதா கணேசனோ நமக்கென்னவென்று வேடிக்கை பார்க்கிறார். ஏற்கனவே அமலாக்கத்துறை பெண் அதிகாரியை தாக்கிய விவகாரத்தில் மேயர் கவிதா கணேசன் பெயர் அடிபடும் நிலையில் இப்போது புது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல கேள்வி எழுப்பிய அதிமுக கவுன்சிலர்கள் இருவரை மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளியே அனுப்புமாறு அவர் உத்தரவிடும் ஆடியோவும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது.அதிமுக கவுன்சிலர்களுடன் கடுமையான முறையில் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரூர் மேயர் கவிதா கணேசன் கடைசியில், போர்டு வைக்க முடியாது என ஆணித்தரமாக கூறியதுடன் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை போல் ஒரு ரியாக்ஷனும் கொடுத்திருக்கிறார்.
மேயர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் எத்தனையோ முறை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பயிலரங்கம் நடத்தியும் அது எதுவும் பலனளிக்கவில்லை என்பதற்கு உதாரணமாக கரூர் மாநகராட்சி நிகழ்வு அமைந்திருக்கிறது. நாமக்கல்லிலும், சென்னையிலும், ஸ்பெஷல் டிரெய்னிங் கிளாஸ் நடத்தப்பட்டதுடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை எப்படி சமாளிக்க வேண்டும், எவ்வாறு சர்ச்சைகள் தவிர்க்க வேண்டும் என கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லியும் நீங்கள் என்ன சொலவ்து நான் என்ன கேட்பது என்பது போல் தான் பல இடங்களிலும் நடந்துகொள்கின்றனர்.
ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இதய அறுவைச் சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் இருக்கிறார். இந்தச் சூழலில் சர்ச்சைகள் ஏற்படாத வண்ணம் சாதுர்யமாக, அமைதியான முறையில் மாநகராட்சி கூட்டத்தை வழி நடத்திச் செல்வதை விட்டுவிட்டு பதிலுக்கு பதில் என்கிற முறையில் போட்டா போட்டி போட்டுக்கொண்டு அடிக்கப் பாய்ந்து மாநகராட்சி கூட்டத்தை அமளி துமளியாக்குவதை கட்சி தலைமை நிச்சயம் ரசிக்காது.












Click it and Unblock the Notifications