இதோ இப்படி ஓரமா விழுந்து கிடக்கே.. அது என்னன்னு பாருங்க.. "ஐயோ" என்று அலறிய பயணிகள்!
ஆம்னி பஸ்சின் முன்பக்க டயர் கழன்று விழுந்து விபத்து ஏற்பட்டது
Recommended Video
கரூர்: இதோ இப்படி ஓரமா விழுந்து கிடக்கே.. அது என்னன்னு தெரியுதா.. ஓடிக் கொண்டிருந்த ஆம்னி பஸ்ஸில் இருந்து, ஒரு டயர் அப்படியே கழண்டு உருண்டு ஓடி, அங்கிருந்த ஒரு ரேஷன் கடை சுவற்றை துளைத்துக் கொண்டு உள்ளே போய் விழுந்தது!! இதையடுத்து பஸ்சுக்குள் இருந்து பயணிகளின் அலறல் சத்தம் அந்த பகுதியே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது!
ஆம்னி பஸ்களில் ஏகப்பட்ட புகார்கள் அடுக்கடுக்காக வர ஆரம்பித்துவிட்டன.. சொகுசுக்காகவும், விரைவான பயணத்துக்காகவும், சில வசதிகளுக்காகவும் ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்து ஆம்னி பஸ்ஸை பயணிகள் தேர்ந்தெடுத்து செல்கின்றனர். ஆனால் உயிருக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற சந்தேகத்தை இந்த பஸ்களின் பயணங்கள் ஏற்படுத்தி வருகின்றன.

கரூரில் இருந்து சேலத்துக்கு கேபிஎன் நிறுவனத்தின் ஆம்னி பஸ் ஒன்று கிளம்பியது. மண்மங்கலம் வட்டம், பண்டுதகாரன்புதூர் பகுதியில் இந்த பஸ் சென்று கொண்டிருந்தபோது, அதன் முன் பக்கம் இடதுபுறத்தில் இருந்த டயர் திடீரென கழன்றுவிட்டது.
வேகமாக உருண்டோடிய டயர்.. ரோட்டோரம் இருந்த ரேஷன் கடையின் சுற்று சுவரை உடைத்து கொண்டு போய் அந்த வளாகத்தில் விழுந்தது. இது தெரியாமல் வண்டியை ஓட்ட முயற்சித்தபோதுதான்,டயர் கழண்டு விட்டது டிரைவருக்கு தெரியவந்தது... பிறகு அந்த பஸ் திடீரென குடைசாய்ந்து விழுந்தது.. இதில் பயணிகள் கத்தி அலறினர்.. ஆனால் படுசாமர்த்தியமாக பஸ்ஸை உடனே நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டார் டிரைவர்.
20-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டாலும், பெரிய அளவு பாதிப்பு இல்லை.. பின்னர் அனைவரையும் வேறு ஒரு பஸ்ஸில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். "நல்ல வேளை, டிரைவர் சாமர்த்தியமா பிரேக் போட்டார்.. இல்லேன்னா ஏடாகூடமா ஏதாவது ஆகியிருக்கும்.. அந்த டயர் ஓடிய வேகத்துக்கு, முன்பக்கம் வேற ஏதாவது வண்டி வந்திருந்தால், பெரிய விபத்துகூட நடந்திருக்கும்." என்று நிம்மதி பெருமூச்சு விட்டவாறு பயணிகள் தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications