கரூர் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் வீட்டில் வருமான வரி சோதனை..சீல் வைக்கப்பட்ட அறை உடைப்பு
கரூர்: கரூரில் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி வீட்டில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்ட வீட்டின் அறையை உடைத்து மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மே 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு மற்றும் அலுவலகம் , அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதன் பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம் அவரது , சகோதரர், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியதோடு பலரது அலுலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட சக்தி மெஸ் கார்த்தி என்பவரது வீட்டில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
20க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சோதனை செய்து சீல் வைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்த போது திமுகவினர் கற்களை வீசி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதால் இந்த முறை துணை ராணுவப்படை வீரர்கள் உதவியினர் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications