Karur CBI: டெல்லியில் விஜய்யிடம்.. கரூரில் போலீசாரிடம்.. ஒரே நேரத்தில் 2 இடங்களில் அதிரடி காட்டும் சிபிஐ
கரூர்: டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் அதே நேரத்தில், கரூரில் உள்ள சிபிஐ முகாம் அலுவலகத்தில் விஜய் பிரசாரத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்கள் 8 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஒரு உதவி ஆய்வாளர் உள்பட 8 போலீசாரிடம் கரூரில் உள்ள சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தவெக தலைவர் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். சிபிஐ முன் ஆஜர் ஆவதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றார். விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் டெல்லி சென்றனர்.

டெல்லி விமான நிலையத்தில் விஐபி கேட் வழியாக வந்த விஜய்யை யாரும் அணுக முடியாத படி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு உள்ளதால், டெல்லியிலும் விஜய் செல்லும் பாதைகளில் போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தியிருந்தனர். சரியாக காலை 11.30 மணியளவில் சிபிஐ அலுவலகம் சென்ற விஜய்யிடம் உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது.
கூட்டம் திடீரென அதிகரித்ததா? அதனை கவனித்தது யார்? என்ன நடவடிக்கை எடுத்தனர்? கூட்ட நெரிசல் ஏற்பட்ட நேரத்தில் நீங்கள் எங்கு இருந்தீர்கள்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை சிபிஐ எழுப்பலாம் என சொல்லப்படுகிறது. டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், கரூரில் உள்ள சிபிஐ முகாம் அலுவலகத்தில் விஜய் பிரசாரத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஒரு உதவி ஆய்வாளர் உள்பட 8 போலீசாரிடம் கரூரில் உள்ள சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். டெல்லியில் விஜய்யிடம் விசாரணை நடத்தி வரும் அதே நேரத்தில், கரூரில் போலீசாரிடம் விசாரணை நடைபெற்று வருவது வழக்கு விசாரணையில் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications