Karur Stampede Live: கரூர் கூட்ட நெரிசல்: விசாரணையைத் தொடங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த சம்பவத்தில், விஜய் பரப்புரையில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், மதியழகன் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ஜாமீனில் வெளிவர முடியாதவை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கரூரில் தவெக பிரச்சாரம் நேற்று வேலுச்சாமிபுரத்தில் நடந்தது. இதில் பேசுவதற்காக வருகை தந்த விஜய்யை பார்க்க ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஏராளமானோருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

karur  vijay

இதில் 34 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் 51 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க முதல்வர் ஸ்டாலின் கரூர் சென்றுள்ளார். அது போல் காயமடைந்தவர்களை கரூர் அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.

Sep 28, 2025, 9:09 pm IST

கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.
Sep 28, 2025, 9:08 pm IST

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியுள்ளார்.
Sep 28, 2025, 8:39 pm IST

கரூரில் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினர்ரை நேரில் சந்தித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் ஆறுதல் கூறினார். அப்போது அவர் காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார்.
Sep 28, 2025, 8:33 pm IST

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பை, என்னதான் ஆறுதல்படுத்தப் பார்த்தாலும் மனம் தவிப்பதை நிறுத்த முடியவில்லை என்று நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார். இறைவா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை ஆறுதல்படுத்து.. நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற புத்தியை எல்லா பாமர மக்களுக்கும் கொடு என்று நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார்.
Sep 28, 2025, 8:24 pm IST

கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 40 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த கிஷோர் என்பவர் வீட்டுக்கு நேரில் சென்று கனிமொழி எம்பி ஆறுதல் கூறினார். பின்னர் தமிழக அரசின் நிவாரணத் தொகை ரூ.10 லட்சத்திற்கான காசோலையை கிஷோரின் குடும்பத்தினரிடம் கனிமொழி எம்பி வழங்கினார்.
Sep 28, 2025, 7:02 pm IST

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், இதுவே மக்களின் எண்ணம் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Sep 28, 2025, 6:57 pm IST

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார். முதலில் கரூர் வேலுசாமிபுரத்தில் பரப்புரை நடந்த இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
Sep 28, 2025, 6:26 pm IST

20 பேருக்கு ஒரு காவல் அதிகாரி என்ற விகிதத்தில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்ட பிறகும் இப்படி நடந்துள்ளது என கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
Sep 28, 2025, 6:26 pm IST

கனிமொழி எம்பி கூறுகையில், ‘சில நேரங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகும்போது, அரசியல் தலைவர்களிடம் அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரிக்கை கொடுப்பார்கள். அதனை எந்தவொரு அரசியல் தலைவரும் ஏற்பார்கள். ஏனென்றால் அந்த எச்சரிக்கை அவர்கள் சம்பந்தப்பட்டது மட்டும் இன்றி மக்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. தவெக குழுவினர்களுக்கும் அப்படி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.
Sep 28, 2025, 5:17 pm IST

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்பியை பணி நீக்கம் செய்ய வேண்டும். தமிழக முதல்வர் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் - அண்ணாமலை
Sep 28, 2025, 5:17 pm IST

தமிழக அரசு தாமாக முன் வந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மின் வெட்டு ஏன் அமல்படுத்தப்பட்டது, விஜய் மீது ஏன் செருப்பு வீசப்பட்டது, எனவே விசாரிக்க வேண்டும் - அண்ணாமலை
Sep 28, 2025, 5:16 pm IST

தமிழகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து அரசு தவறி வருகிறது. 500 போலீசார் பாதுகாப்புக்கு வந்து இருப்பதாக சொல்கிறார்கள், ஆனால் அங்கு 100 பேர் கூட இல்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sep 28, 2025, 5:16 pm IST

எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீது தான். வேலுச்சாமிபுரம் என்பது மிக குறுகலான இடம், 100 போலீசார் கூட களத்தில் இல்லை. ஆம்புலன்ஸ் கூட போக முடியாத இடத்தில் போலீசார் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள் - அண்ணாமலை
Sep 28, 2025, 5:16 pm IST

கரூர் சம்பவத்தில் 40 அப்பாவி உயிர்களை பறிகொடுத்துள்ளோம். மருத்துவமனையில் இன்னும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு முன்பு இப்படி நடந்தது கிடையாது, இனியும் இப்படி நடக்கக் கூடாது - பாஜக அண்ணாமலை
Sep 28, 2025, 4:48 pm IST

கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு விசாரணை முடியும் வரை தவெக மற்றும் அந்த கட்சித் தலைவர் விஜய் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என செந்தில் கண்ணன் என்பவர் தொடர்ந்த மனு மீது இன்று விசாரணை இல்லை. தவெக தாக்கல் செய்த வழக்கில் இடையீட்டு மனுவாக தாக்கல் செய்ய உள்ளதால் நீதிபதி சதீஷ்குமார் தான் விசாரிக்க முடியும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை தகவல் அளித்துள்ளது.
Sep 28, 2025, 4:47 pm IST

கரூர் துயரச் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் அருணா ஜெகதீசன் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
Sep 28, 2025, 4:17 pm IST

கரூரில் விஜய் பேசும்போது மின்தடை எதுவும் ஏற்படவில்லை. தவெகவினர் வைத்திருந்த ஜெனரேட்டர்கள் தான் கூட்ட நெரிசலால் அணைந்தது - மின் வாரியம் விளக்கம்
Sep 28, 2025, 4:00 pm IST

நாளை கடையடைப்பு

கரூர் கூட்ட நெரிசல் பலி எதிரொலியாக தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு. நாளை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.
Sep 28, 2025, 3:57 pm IST

தவெகவினர் முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான இடம். அங்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து நிகழ்ச்சி நடத்த முடியாது என விளக்கினோம். - சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம்
Sep 28, 2025, 3:33 pm IST

கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின் போது 40 பேர் பலியான சம்பவத்துக்கு நடிகர் ரவி மோகன் இரங்கல்
Sep 28, 2025, 2:39 pm IST

மிகவும் கனத்த இதயத்தோடு நிற்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
Sep 28, 2025, 2:39 pm IST

உயிரிழப்பு செய்திகள் என் மனதைக் கலங்கடித்தன - முதல்வர் ஸ்டாலின்
Sep 28, 2025, 2:39 pm IST

ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இதுவரை நடந்திராதது இது, இனியும் நடக்கக்கூடாது - முதல்வர் ஸ்டாலின்
Sep 28, 2025, 1:00 pm IST

சென்னை பனையூரில் விஜய் வீடு முன்பு பெரியார் அமைப்பினர் முற்றுகை போராட்டம்
Sep 28, 2025, 1:00 pm IST

பதில் சொல் பதில் சொல் மக்களுக்கு பதில் சொல் என கோஷம்
Sep 28, 2025, 1:00 pm IST

வெளியே வா வெளியே வா- விஜய் வீட்டை முற்றுகையிட்டு கோஷம்
Sep 28, 2025, 11:37 am IST

நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்பு - விஜய்

”நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.” என எக்ஸ் பக்கத்தில் விஜய் பதிவு
Sep 28, 2025, 11:30 am IST

கண்களும் மனமும் கலங்கி நிற்கிறேன் - விஜய்

கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். என தவெக விஜய் பதிவு
Sep 28, 2025, 11:19 am IST

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 20 லட்சம் நிதி- விஜய் அறிவிப்பு
Sep 28, 2025, 10:36 am IST

"மரத்தில் ஏற வேண்டாம், மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என பல கோரிக்கைகள் வைக்கிறோம்; இதற்குமேல் கட்டுப்படுத்துவது குறிப்பிட்ட இயக்கத்தின் தலைவர், இரண்டாம்கட்ட தலைவர்களுடைய பொறுப்பு" - கரூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+