Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வெளியே வராதது ஏன்? நீதிமன்றத்தில் தவெக தரப்பு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்துவிட்டார்கள், எங்களுக்கு தான் அதிக வருத்தம், விஜய் அதனால் தான் வரவில்லை என நீதிமன்றத்தில் தவெக தரப்பு வாதம் வைத்துள்ளது. இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை என்றும், நாங்கள் கட்சிக்காரர்களை தடுக்கலாம், மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான் என்றும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தவெக தரப்பினர் வாதம் வைத்தனர்.

கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் வேலுசாமிபுரத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் 10 பேர், பெண்கள் 17 பேர் என மொத்தம் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Vijay

இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. கரூர் நகர் காவல்துறை சார்பிலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்படனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்ந்து இருவரும் இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி பரத்குமார் விசாரணை நடத்தினார். அரசு தரப்பு வழக்கறிஞர் தண்டபாணி ஆஜராகி தனது தரப்பு வாதத்தை வைத்தார். அப்போது அவர் "கரூரில் போலீஸ் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியது. ஆனால் தவெக நிர்வாகிகள் பின்பற்றவில்லை. கரூர் சம்பவத்தில் சிகிச்சை பெற்று வருவோரில் மேலும் சிலர் இறக்க நேரிடும் என்பதால் மேலும் சிலரை கைது செய்ய வேண்டி இருக்கிறது" என்று கூறினார்.

தவெக சார்பில் பேசிய வழக்கறிஞர், விஜய் பரப்புரைக்கு பேருந்து நிலைய ரவுண்டானா பகுதி, லைட் ஹவுஸ் பகுதி, உழவர் சந்தை பகுதியை கேட்டிருந்தோம். ஆனால் போலீஸாரோ அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அதாவது லைட் ஹவுஸ் பகுதியில் பேசிவிட்டு உழவர் சந்தை வழியாக சென்றால் அங்கு 60 ஆயிரம் பேர் முதல் 1 லட்சம் பேர் வரை இருந்தாலும் அந்த கூட்டம் எளிதாக கலைந்து சென்றிருக்கும்.

ஆனால் போலீசார் எங்களுக்கு அங்கு அனுமதி தரவில்லை. ஒரே இடம் தான் தருவோம்.. கூட்டம் நடத்தினால் நடந்துங்கள் என்று கறார் காட்டினர். முதலில் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்றுதான் அனுமதி கேட்டிருந்தோம்" என்று கூறினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "காலாண்டு விடுமுறை, வார விடுமுறை எனும் போது விஜய்யை பார்க்க குறைந்த அளவு கூட்டம் வரும் என எப்படி கணக்கிட்டீர்கள்" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் தெரிவித்த தவெக வழக்கறிஞர், நாங்களே இவ்வளவு பேர் வருவாங்க என்று நினைக்கவில்லை. யாரையும் காசு கொடுத்து அழைத்து வரவில்லை. வண்டிகள் ஏற்பாடு செய்து அழைத்து வரவில்லை. முழுக்க வந்தது எல்லாரும் கட்சிக்காரர்கள் மட்டுமில்லை. பொதுமக்களும் விஜய்யை பார்க்க வேண்டும் என நினைத்து வந்திருந்தார்கள். நாங்கள் கட்சிக்காரர்களை தடுக்கலாம், மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான்.

சாலை நடுவே உள்ள சென்டர்மீடியனை எடுத்து கொடுத்திருந்தால் பரப்புரை சுலபமாக இருந்திருக்கும். எங்களுக்கு தான் அதிக வருத்தம், எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்துவிட்டார்களே என்று விஜய்க்கு அதிக வருத்தம். அதனால் தான் அவர் வரவில்லை. என்று கூறினார். அப்போது நீதிபதி மனசாட்சிப்படி தான் உத்தரவு பிறப்பிப்பேன் என கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+