கரூர் துயரம்: 8 மணி நேரமாக ஒரு வேலையும் இல்லாமல் 27 ஆயிரம் பேர்.. நொந்து சொன்ன வைரமுத்து
கரூர்: 8 மணி நேரத்திற்கும் மேல் ஒரு வேலையும் இல்லாமல் 27 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்க முடியும் என்றால் அவர்களது வாழ்வியல் என்ன என வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் கூட்டங்களிலோ, ஆன்மிகக் கூட்டங்களிலோ, இனி இந்த நெடுந்துயரம் நிகழாது என்னும் விதிசெய்ய வேண்டும் என்றும் இது தான் 41 சாவுகள் கன்னத்தில் அறைந்துசொன்ன பாடம் என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜய்யின் கரூர் பரப்புரை கூட்டத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் என மொத்தம் 41 உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்து உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது வருகிறது. இது மட்டும் இன்றி நேற்று சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக விஜய்யை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. விஜய்க்கு தலைமைப்பண்பு இல்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தது. இந்த நிலையில், "8 மணி நேரத்திற்கும் மேல் ஒரு வேலையும் இல்லாமல் 27 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்க முடியும் என்றால் அவர்களது வாழ்வியல் என்ன என கவிப்பேரரசு வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
கரூர்த் துயரத்தின்
— வைரமுத்து (@Vairamuthu) October 4, 2025
இறுக்கத்திலிருந்து
தமிழர்கள் மெல்லமெல்ல
விடுபட வேண்டும்
ஊடகங்களும்
சமூக உரையாடல்களும்
அந்த மனத்தடையிலிருந்து
வெளியேற வேண்டும்
அரசியல் கூட்டங்களிலோ
ஆன்மிகக் கூட்டங்களிலோ
இனி இந்த நெடுந்துயரம்
நிகழாது என்னும்
விதிசெய்ய வேண்டும்
41 சாவுகள்
கன்னத்தில்…
கரூர்த் துயரத்தின்
இறுக்கத்திலிருந்து
தமிழர்கள் மெல்லமெல்ல
விடுபட வேண்டும்
ஊடகங்களும்
சமூக உரையாடல்களும்
அந்த மனத்தடையிலிருந்து
வெளியேற வேண்டும்
அரசியல் கூட்டங்களிலோ
ஆன்மிகக் கூட்டங்களிலோ
இனி இந்த நெடுந்துயரம்
நிகழாது என்னும்
விதிசெய்ய வேண்டும்
41 சாவுகள்
கன்னத்தில் அறைந்துசொன்ன
பாடம் இதுதான்
இந்தக் கருப்புத் துயரத்துக்கு
நேரடியாகவோ மறைமுகமாகவோ
தொடர்புடைய யாரும்
ஒரு தனி அறையில்
தம் மனச்சான்றோடு உரையாடித்
தாமே தம்மிடம்
மன்னிப்புக் கேட்கவேண்டும்
ஒரு செய்தி என்னை
உறுத்திக்கொண்டே இருக்கிறது
8 மணி நேரத்திற்கு மேல்
ஒரு வேலையும் இன்றி
27ஆயிரம்பேர் ஒரே இடத்தில்
நின்றுகொண்டிருக்க
முடியுமென்றால்
அவர்களின் வாழ்வியல் என்ன?
அவர்களால் இழக்கப்படும்
மனிதவளம் என்ன?
கல்வி நிறைந்த சமூகம்
என்கிறோமே
இவர்களுக்குக் கல்வி
என்ன செய்தது?
வெறும் எழுத்தறிவா கல்வி?
காலத்தின் அருமையை
வாழ்வின் பெருமையைக்
கற்றுத் தருவதல்லவா கல்வி
அந்த 27 ஆயிரம் பேர்
இன்னும் கலைந்துவிடவில்லை
நாடெங்கும் அந்த மக்களைக்
கணக்கெடுக்க வேண்டும்
தொழில் கொடுத்து
அவர்களுக்கு நேரமில்லாமல்
செய்ய வேண்டும்
நாளாகலாம்...
ஆனால்,
அதை நோக்கிச் சமூகம்
நடந்தே தீர வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications