கரூருக்கு பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு? செந்தில்பாலாஜி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?
கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, பிறகு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், கரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக கே.என்.நேரு நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இவர் சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் நிலையில், 4 தொகுதிகளை மட்டும் உள்ளடக்கிய கரூர் மாவட்டத்தையும் சேர்த்துக் கவனித்துக் கொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது எனக் கருதப்படுகிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சட்ட விரோதமானதல்ல எனக் கூறி, நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்பதாக மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் நேற்றைய தினம் தீர்ப்பளித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்ற அமலாக்கத் துறை தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி கார்த்திகேயன், சிகிச்சையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது எனவும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதியளித்து உத்தரவிட்டார்.
இது அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. விசாரணையிலிருந்து தப்ப முடியாது என்பதை நேற்றைய தீர்ப்பு உணர்த்தியுள்ளது. இதனால் செந்தில்பாலஜி விவகாரம் இத்தோடு முடிந்துவிடப் போவதில்லை. இந்நிலையில் தான் கரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நேரு நியமிக்கப்படலாம் என கரூர் புறநகர் மாவட்ட திமுகவினராலேயே முணுமுணுக்கப்படுகிறது.
இதனிடையே செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டுவதற்கான சட்ட ஆலோசனைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேல்முறையீட்டில் செந்தில்பாலாஜி கைது சட்டவிரோதமானது என ஒரு வேளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும் கூட அவருக்கு குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரையிலாவது ஓய்வு வேண்டும் என்பதற்காக தான் மாற்று பொறுப்பு அமைச்சர் பற்றிய யோசனை எழுந்திருக்கிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications