கரூர் தொகுதியை 8-வது முறையாக கைப்பற்றிய காங்கிரஸ்-முதல் சுற்றிலேயே ஜோதிமணியை கலங்க வைத்த வேடசந்தூர்!
கரூர்: கரூர் லோக்சபா தொகுதியை காங்கிரஸ் கட்சி 8-வது முறையாக கைப்பற்றியது. கரூர் தொகுதியில் காங்கிரஸின் இளம் எம்பி ஜோதிமணி 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
கரூர் லோக்சபா தொகுதியில் வேடசந்தூர், அரவக்குறிச்சி, விராலிமலை, மணப்பாறை, கிருஷ்ணராயபுரம், கரூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 14, 29, 790 வாக்காளர்களைக் கொண்டது கரூர் லோக்சபா தொகுதி.

லோக்சபா தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிட்டதும் கரூர் தொகுதியில்தான். மொத்தம் 54 பேர் போட்டியிட்டனர். காங்கிரஸ் ஜோதிமணி, அதிமுக தங்கவேல், பாஜக செந்தில்நாதன், நாம் தமிழர் கருப்பையா முக்கியமான வேட்பாளர்கள்.
கரூர் தொகுதியானது 16 தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. இதில் காங்கிரஸ் தற்போது வரை மொத்தம் 8 முறை வென்றுள்ளது. அதிமுக 6, திமுக, தமாகா, சுதந்திரா கட்சி ஆகியவை தலா ஒரு முறை வென்றுள்ளன.
தற்போதைய தேர்தலில் கரூர் முடிவுகள்:
காங்கிரஸ் ஜோதிமணி 5,34,906
அதிமுக தங்கவேல் 3,68,090
பாஜக செந்தில்நாதன் 1,02,482
நாம் தமிழர் கருப்பையா 87,503.
கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது ஜோதிமணி எம்பியை ரொம்பவே அதிர வைத்தது வேடசந்தூர் சட்டசபை தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள்தானாம். வேடசந்தூர் தொகுதியில் ஜோதிமணி பிரசாரம் செய்த போது பல இடங்களில் அவரை வழிமறித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்கள் நடந்தது. 2019 தேர்தலில் வென்று நன்றி தெரிவிக்கக் கூட வரவில்லையே என எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. இதனால் வேடசந்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
வேடசந்தூர் சட்டசபை தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஜோதிமணி 3,326 வாக்குகளையும் அதிமுகவின் தங்கவேல் 3,082 வாக்குகளையும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது ஜோதிமணி தரப்பை ரொம்பவே அப்செட் ஆக்கி இருந்ததாம். 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் மிகப் பெரிய இடைவெளியாக ஜோதிமணிக்கு 4,417 வாக்குகளும் அதிமுக தங்கவேலுக்கு 2,744 வாக்குகளும் மட்டும் கிடைத்தன. ஆனால் 3-வது சுற்றில் ஜோதிமணிக்கு 4,462-ம் தங்கவேலுக்கு 4217-ம் கிடைக்க மீண்டும் பதற்றம் ஏற்பட்டதாம். 5-வது சுற்றில் இருந்துதான் தொடர்ச்சியாக ஜோதிமணி அதிக இடைவெளி வித்தியாசத்தில் முன்னேறிக் கொண்டே இருந்ததால் பெரும் நிம்மதி ஏற்பட்டதாம்.
விளையாட்டு காட்டிய வேடசந்தூர் தொகுதி!












Click it and Unblock the Notifications